தூத்துக்குடி மேம்பாலத்தில் பறக்கும் படை சோதனை:வாகன ஓட்டிகள் அச்சம்
பறக்கும் படை அதிகாரிகள் சோதனை
தூத்துக்குடியில் 3வது மைல் மேம்பாலத்தில் தேர்தல் பறக்கும் படையினர் வாகன சோதனை நடத்தி வருவதால் விபத்து அபாயம் உள்ளதாக வாகன ஓட்டிகள் குற்றம் சாட்டியுள்ளனர்.
தூத்துக்குடியில் மக்களவை பொதுத் தேர்தலை முன்னிட்டு பறக்கும் படை அதிகாரிகள் தீவிர சோதனை நடத்தி வருகின்றனர். இந்நிலையில், தூத்துக்குடி 3வது மைல் மேம்பாலத்தில் இன்று காலை போலீசார் மற்றும் பறக்கும்படை அதிகாரிகள் வாகன சோதனையில் ஈடுபட்டு வருகின்றனர்.
இதனால் அந்த சாலையில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டுள்ளது. வாகனங்களை மேம்பாலத்தில் நிறுத்தி சோதனை நடத்துவதால் தூத்துக்குடி நகருக்குச் செல்லும் வாகனங்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கியுள்ளன. பாலத்தில் 3 வரிசைகளாக வாகனங்கள் நிறுத்தப்படுவதால் விபத்து ஏற்படும் அபாயம் ஏற்பட்டுள்ளது.
இது தொடர்பாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலாஜி சரவணன் நடவடிக்கை எடுக்க வாகன ஓட்டிகள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
Next Story