கன்னியாகுமரியில் பறக்கும் படை இதுவரை ஒரு கோடி ரூபாய் பறிமுதல் !
பறிமுதல்
வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் பாராளுமன்ற தேர்தல் களம் சூடு பிடிக்க தொடங்கியுள்ளது. தலைவர்கள் தீவிர பிரச்சாரம் செய்து வருகிறார்கள். வாக்காளர்களுக்கு பணம் பட்டுவாடா செய்வதை தடுக்கும் வகையில் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர கண்காணிப்பு பணியை மேற்கொண்டு வருகிறார்கள். மாவட்ட முழுவதும் தீவிர வாகன சோதனைகள் நடத்தப்பட்டு வருகிறது.குமரியில் நேற்று காலை முதல் இன்று காலை வரை நடத்தப்பட்ட வாகன சோதையில் 7லட்சத்து 60 ஆயிரத்து 800 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக தகவல் தெரிய வந்துள்ளது. குமரி சட்டமன்ற தொகுதியில் ரூபாய் ஒரு லட்சம், நாகர்கோவில் பகுதியில் 3 லட்சத்து 11 ஆயிரம் ரூபாய், குளச்சல் தொகுதியில் ஒரு லட்சத்து 50 ஆயிரம் என பறக்கும் படை அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. விளவங்கோடு தொகுதியில் ரூபாய் 54 ஆயிரத்து 800, கிள்ளியூர் தொகுதியில் ரூபாய் ஒரு லட்சத்து 45 ஆயிரம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளது. மாவட்டம் முழுவதும் இதுவரை பறக்கும் படை அதிகாரிகளால் ரூபாய் 99 லட்சத்து 85 ஆயிரத்து 57 ரூபாய் பறிமுதல் செய்ததாக அறிவிப்பு வெளியாகி உள்ளது. மாவட்டம் முழுவதும் இன்று காலை முதலே பறக்கும் படை அதிகாரிகள் மேலும் சோதனை மேற்கொண்டார்கள்.
Next Story