துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை

துணை ராணுவ வீரர்களுடன் இணைந்து பறக்கும் படை அதிகாரிகள் வாகன சோதனை

வாகன சோதனை

சேலத்தில் துணை ராணுவத்துடன் இணைந்து பறக்கும் படையினர் வாகன சோதனையில் ஈடுப்பட்டனர்.

தமிழகத்தில் நாடாளுமன்ற தேர்தலுக்கான வாக்குப்பதிவு வருகிற 19-ந் தேதி நடக்கிறது. வாக்காளர்களுக்கு பணம் மற்றும் பரிசு பொருட்கள் வழங்குவதை தடுக்க தமிழகம் முழுவதும் பறக்கும் படை அதிகாரிகள் தீவிர வாகன சோதனை நடத்தி வருகின்றனர். அதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள 11 சட்டசபை தொகுதிகளிலும் சோதனை நடத்த தேர்தல் அலுவலர் பிருந்தாதேவி, உதவி தேர்தல் அலுவலர் பாலச்சந்தர் ஆகியோர் உத்தரவின்பேரில் மாவட்டம் முழுவதும் 33 பறக்கும் படை, 33 நிலை கண்காணிப்பு குழுக்கள் அமைக்கப்பட்டுள்ளன. இவர்கள் 24 மணி நேரமும் சுழற்சி முறையில் வாகன சோதனை நடத்தி வருகின்றனர். இந்த சோதனையில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் எடுத்து செல்லும் பணம், உரிய ஆவணம் இன்றி எடுத்து செல்லும் தங்கம், வெள்ளி பொருட்கள் பறிமுதல் செய்து வருகின்றனர்.

அதன்படி மாவட்டத்தில் இதுவரை சுமார் ரூ.2 கோடி மதிப்பிலான பணம், பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளன. இதற்கிடையே தேர்தல் நாள் நெருங்குவதால் துப்பாக்கி ஏந்திய துணை ராணுவ வீரர்கள், பறக்கும் படை அதிகாரிகள் இணைந்து நேற்று மாவட்டம் முழுவதும் தீவிர வாகன சோதனை நடத்தினர். அதன்படி ஓமலூர் மெயின் ரோட்டில் நேற்று பறக்கும் படை அதிகாரி சரவணன் தலைமையில் போலீசார் மற்றும் துணை ராணுவ வீரர்கள் இணைந்து தீவிர வாகன சோதனை நடத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story