பறக்கும்படை அலுவலர்கள் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

பறக்கும்படை அலுவலர்கள் சோதனையில் ரூ.1 லட்சம் பறிமுதல்

வாகன சோதனை 

வேடசந்தூர் அருகே பறக்கும் படை அதிகாரிகள் நடத்திய வாகன சோதனையில் உரிய ஆவணங்களின்றி கொண்டு செல்லப்பட்ட ரூ.1 லட்சம் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.
வேடசந்தூர்-ஒட்டன்சத்திரம் சாலையில் சீத்தமரம் நான்கு வழி சாலையில் தேர்தல் பறக்கும்படை அலுவலர்கள் வாகன சோதனையில் நேற்று ஈடுபட்டனர். பழனியிலிருந்து வேடசந்தூர் நோக்கி வந்த காரை ஆய்வு செய்ததில் ரூ.1 லட்சம் பணம் இருப்பது கண்டறியப்பட்டது. உரிய ஆவணங்கள் இல்லாததால் பணத்தை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.

Tags

Next Story