பறக்கும் படை சோதனை - ரூபாய் 69 லட்சம் பறிமுதல்
பணம் பறிமுதல்
குமரி மாவட்டத்தில் இதுவரை நடந்த பறக்கும் படை சோதனையில் ரூபாய் 69 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தகவல்.
கன்னியாகுமரி மாவட்டத்தில் இதுவரை 5 நடந்த பறக்கும்படை சோதனையில் 5 மொத்தம் ரூ.69 லட்சத்து 8 ஆயிரத்து 537 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர். குமரி மாவட்டத்தில் வாக்காளர்களுக்கு பணம், பரிசு பொருட்கள்விநியோகத்தை தடுக்க 36 பறக்கும் படைகள் அமைக்கப்பட்டு கண்காணிப்பு பணிகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. மாவட்டத்தில் இன்று காலை வரை மொத்தம் 69 லட்சத்து 8 ஆயிரத்து 537 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது.இதில் கன்னியாகுமரியில் ரூ.13 லட்சத்து 33 ஆயிரத்து 820, நாகர்கோவிலில் ரூ.26 லட்சத்து 24 ஆயிரத்து 200, குளச்சலில் ரூ.10 லட்சத்து 49 ஆயிரத்து 267, பத்மநாபபுரத்தில் 5 லட்சத்து 61 ஆயிரத்து 950, விளவங்கோட்டில் ரூ.7 லட்சத்து 35 ஆயிரத்து 400, கிள்ளியூரில் ரூ.5 லட்சத்து 41 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டுள்ளது என்று அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
Next Story