மயிலரங்கத்தில் பறக்கும் படை அதிரடி சோதனை: வியாபாரிகளிடம் பணம் பறிமுதல்

பணம் பறிமுதல்
திருப்பூர் மாவட்டம் காங்கேயம் வெள்ளகோவிலை அடுத்துள்ள மயிலரங்கத்தில் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்போது தாரமங்கலத்தை சேர்ந்த 4 நபர்கள் ரூ. 88 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து வந்திருந்தனர்.
தேர்தல் விதிமுறைக்கு அமுலில் உள்ளதால் அதிக அளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கேயம் வட்டாட்சியரிடம் ஒப்படைத்தனர். வரும் ஏப்ரல் 19ஆம் தேதி நாடாளுமன்ற தேர்தலை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகள் அமல்படுத்தப்பட்டுள்ளது.
இந்நிலையில் போதிய உரிமம் இன்றி பண பரிவர்த்தனைகள் அல்லது பணத்தை எடுத்துச் செல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என்று அறிவுறுத்தப்பட்டிருந்த நிலையில் இன்று திருப்பூர் மாவட்டம், காங்கயம் வெள்ளகோவில் அருகே மயில்ரங்கம் பகுதியில் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் தேர்தல் நடத்தை விதிமுறையை முன்னிட்டு கண்காணிப்பு மற்றும் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது சேலம் மாவட்டம் தாரமங்கலத்தை சேர்ந்த 4 நபர்கள் தலா ரூ. 22 ஆயிரம் என்ற வீதம் மொத்தம் ரூ. 88 ஆயிரம் ரொக்க பணத்தை எடுத்து வந்திருந்தனர். மேலும் தேர்தல் விதிமுறைக்கு உட்பட்டு மதிப்பை விட அதிகளவு தொகையை எடுத்துச் சென்றதால் தேர்தல் பறக்கும் படை அதிகாரிகள் அந்த 4 நபர்கள் கொண்டுவந்த , ரூ. 88 ஆயிரம் பணத்தையும்,
லோடு ஆட்டோவையும் தேர்தல் அதிகாரிகள் பறிமுதல் செய்து காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் வட்டாச்சியர் மயில்சாமியிடம் ஒப்படைத்தனர். இதனை அடுத்து வட்டாச்சியர் மயில்சாமி அந்த நபர்களிடம் விசாரணை நடத்தியதில் அந்த நபர்கள் தாங்கள் சேலம் மாவட்டம் தாரமங்களத்தை சேர்ந்த ராஜா, அய்யனார், தனசேகர் மற்றும் முரளி என்றும் நாங்கள் 4 பேரும் ஆடு வியாபாரிகள் என்றும், வியாழக்கிழமை கன்னிவாடி வார வாரம் நடைபெறும் ஆட்டுச்சந்தைக்கு அடிக்கடி வருவதாகவும், இந்த வாரமும் ஆடுகளை வாங்க வந்துள்ளோம் என்றும்,
அதற்காக தலா ரூ. 22 ஆயிரம் பணத்தை வைத்திருந்தோம் என்றும் கூறியுள்ளனர். தல ஒரு நபர் ரூ.50 ஆயிரம் வைத்திருக்லாம் என்று நினைத்து ஒரே வாகனத்தில் வந்ததாகவும் தெரிவித்தனர். ஆனால் ஒரு வாகனத்தில் ரூ.50 ஆயிரத்துக்கு மேல் கொண்டு வந்த காரணத்தினால் தேர்தல் நடத்தை விதிமுறைகளை மீறி போதிய உரிமமின்றி ரூ.88 ஆயிரம் ரொக்கப் பணத்தை எடுத்துச் சென்றதாக கூறி பணம் மற்றும் வாகனத்தை பறிமுதல் செய்து காங்கேயம் வட்டாச்சியர் அலுவலகத்தில் காத்திருப்பதாக வேதனையுடன் அந்த வியாபாரிகள் தெரிவித்தனர்.
ஆடு,மாடு போன்ற கால்நடைகளை வாங்கோ விற்க்கோ நினைக்கும் வியாபாரிகள் மற்றும் விவசாயிகளுக்கு எந்த ஒரு வகையிலும் ரசீதுகள் இருக்காது இந்த நிலையில் இவர்களின் நிலைமை கேள்விக்குறியாகிறது என்கின்றனர்.
