ராமநாதபுரம் அருகே இலங்கை கிராமத்தில் ரூ.17.32 கோடி மதிப்பில் மேம்பாலம் - ரயில்வே அமைச்சகம் அனுமதி
ராமநாதபுரம் அருகே இலங்கை கிராமத்தில் ரூ.17.32 கோடி மதிப்பில் மேம்பாலம்
அரசுக்கு பொதுமக்கள் நன்றி தெரிவித்துள்ளனர்
ராமநாதபுரம் அருகே லாந்தை ரயில்வே சுரங்கப்பாதையில் மழை நீர் சூழ்வதால் லாந்தை, கண்ணனை, பெரிய தாமரைக்குடி, சின்ன தாமரைக்குடி, திரிபுனை கிராம மக்கள் 5 கிமீ தூர சுற்றுப்பாதையில் தங்கள் கிராமங்களுக்கு செல்லும் நிலை உள்ளது. இப்பாதையை அகற்றக்கோரி பல்வேறு போராட்டங்கள் நடத்தினர். இந்நிலையில், நவ.18 ல் ராமேஸ்வரத்திற்கு வந்த மத்திய நிதித்துறை அமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கிராம மக்கள் முறையிட்டனர். லாந்தை ரயில்வே சுரங்கப்பாதைக்கு பதிலாக, பாதுகாப்புடன் கூடிய ரயில்வே கேட் அல்லது மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வின் வைஷ்ணவிடம், நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் 5 கிராம மக்கள் சார்பில் கோரிக்கை வைத்தனர் மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதா ராமன் பரிந்துரையை ஏற்று, லாந்தை சுரங்கப்பாதைக்கு மாற்றாக ரூ.17.32 கோடி மதிப்பில் குடை வடிவ மேம்பாலம் அமைக்க ரயில்வே அமைச்சர் அஷ்வினி வைஷ்ணவ் ஒப்புதல் படி ரயில்வே அமைச்சகம் அரசாணை பிறப்பித்துள்ளது. இதனால் மகிழ்ச்சி அடைந்த 5 கிராம மக்கள் மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன், ரயில்வே அமைச்சர் அஸ்வினி வைஷ்ணவ் நன்றி தெரிவித்துள்ளனர்.
Next Story