புதுக்கோட்டை இசை பள்ளியில் நாட்டுப்புற கலை பயிற்சி வகுப்புகள்!
புதுக்கோட்டை
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டுப்புற கலைப் பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஜூலை 12ம்.ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுவுள்ளது.
தமிழக அரசின் கலை பண்பாட்டு துறை சார்பில் நாட்டுப்புற கலைப் பயிற்சி வகுப்புகள் புதுக்கோட்டையில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஜூலை 12ம்.ஆம் தேதி முதல் தொடங்கப்பட்டுவுள்ளது. இதுகுறித்து மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ள செய்தி குறிப்பில் தமிழக அரசின் கலை பண்பாட்டுத்துறை சார்பில் தமிழகத்தில் 25 இடங்களில் பகுதிநேர நாட்டுப்புற கலை பயிற்சிமையங்களை ஏற்படுத்தி தற்கால தலைமுறையினருக்கு கலை பயிற்சி வழங்க அரசு உத்தரவிட்டுள்ளது. அதன்படி புதுக்கோட்டை மாவட்டத்தில் உள்ள மாவட்ட அரசு இசைப்பள்ளியில் ஜூலை 12-ஆம் தேதி முதல் நாட்டுப்புற கலைப்பயிற்சி வகுப்புகள் தொடங்கப்பட்டுள்ளன. இந்த பயிற்சி வகுப்புகளில் நாடகம், கிராமியப்பாட்டு, கரகாட்டம், தப்பாட்டம் ஆகிய கலைகளில் 17 வயதுக்கு மேற்பட்டவர்கள் சேரலாம். கலை ஆர்வமுள்ளவர்கள் மட்டுமில்லாமல் கலைஞர்களும் அரசின் சான்றிதழ் பெறும் வகையில் இந்த வகுப்பில் சேரலாம்.ஓராண்டு பயிற்சிக்கு பின்னர். அரசுத்தேர்வு நடத்தப்பட்டு பல்கலைக்கழகம் மூலம் சான்றிதழ் வழங்கப்படும். இதற்கு கல்வித் தகுதியாக குறைந்தபட்சம் எட்டாம் வகுப்பு தேர்ச்சி போதுமானது. எட்டாம் வகுப்புக்கு குறைவான கல்வித் தகுதி உள்ளவர்களும் பயிற்சியில் சேரலாம். ஆனால், தேர்வு எழுத இயலாது. இந்த பயிற்சி வகுப்புகள் வாரத்தில் இரண்டு நாட்கள் (வெள்ளி மற்றும் சனிக்கிழமை) தோறும் மாலை 4:00மணி முதல் 6:00 மணி வரை நடைபெறும். இந்த பயிற்சி வகுப்புகளுக்கு ஆண்டு கட்டணமாக ரூபாய்.500/-மட்டும் செலுத்த வேண்டும். இந்த நாட்டுப்புற கலை பயிற்சிகளில் சேர விரும்புவோர் பயிற்சி மைய ஒருங்கிணைப்பாளர் தொடர்பு எண் : 9786484850 மற்றும் இசைப்பள்ளி அலுவலக தொலைபேசி எண்: 04322-225572 மற்றும் கைப்பேசி எண்: 9486152007-ல் தொடர்பு கொள்ளலாம். இந்த வாய்ப்பை கலை ஆர்வம் உள்ளவர்கள் பயன்படுத்திக் கொள்ளலாம் என மாவட்ட ஆட்சியர் ஐ.சா.மெர்சி ரம்யா தெரிவித்துள்ளார்.
Next Story