நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.

நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம்.
நாட்டுப்புற கலைஞர்கள் சங்க செயற்குழு கூட்டம். அரூர், டிச.18: தர்மபுரி,கிருஷ்ணகிரி, திருப்பத்தூர் மாவட்ட ஒருங்கிணைந்த,தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புறப்றக் கலைஞர்கள் மாநில செயற்குழு கூட்டம் அரூரில் நடந்தது. மாநில தலைவர் சத்தியராஜ் தலைமை வகித்தார்.ஆதிமூலம் வரவேற்றார். அரூர் சட்டமன்ற உறுப்பினர் சம்பத்குமார் சிறப்பு விருந்தினராக கலந்துகொண்டு சான்றிதழ் வழங்கினார். மாவட்ட தலைவர் பழனிசாமி,கணேசன், பெருமாள்,கணேசன், வெங்கடேசன், வேடியப்பன், சேகர்,சுந்தரேசன், பச்சமுத்து முன்னிலை வைத்தனர். மாநில தலைமை ஆலோசகர் பழனி, மாநில துணை.தலைவர்கள் செல்வராஜ், கண்ணன், மாநில பொருளாளர் நாகூர் கனி, மாநில செயலாளர் குப்புசாமி,முனிரத்தினம், அசோக்குமார், மகாலட்சுமி, திருநாவுக்கரசு ஆகியோர் கலந்துகொண்டு பேசினர். தமிழ்வேந்தன் நன்றி கூறினார். கூட்டத்தில் நலிவுற்ற கலைஞர்களுக்கு ஓய்வூதியத்தை ரூ.3000 ஆக உயர்த்தி வழங்கியதற்கு , 'பஸ் கட்டண சலுகை, ஆடை அணிகலன்கள் வாங்க ரூ.10 ஆயிரம் நிதியுதவி, 5 வகையான விருதுகள் வழங்க முன்மொழிவு ஆகியவற்றை வழங்கிய தமிழக அரசுக்கு நன்றி தெரிவித்து.தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டது.

Tags

Next Story