நலத்திட்டங்கள் முறையாக கிடைக்க நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்

நலத்திட்டங்கள் முறையாக கிடைக்க  நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தல்
 நாட்டுப்புற கலைஞர்கள்


நலிந்த கலைஞர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை எளிய முறையில் வழங்க ஆவண செய்ய வேண்டும், அரசின் நலத்திட்ட செயல்பாடுகள் முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என நாட்டுப்புற கலைஞர்கள் வலியுறுத்தி உள்ளனர்.
தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச் சங்கம், விழுப்புரம் அங்காள பரமேஸ்வரி பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் நலச்சங்கத்தின் 3-ம் ஆண்டு சங்க தொடக்க கலை விழா, சங்கரதாஸ் சுவாமியின் 101-ம் ஆண்டு ஆராதனை விழா விழுப்புரத்தில் நடைபெற்றது, விழாவையொட்டி பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் உள் ளிட்ட நாட்டுப்புற கலைஞர்கள் சார்பில் பேரணி நடைபெற்றது. விழுப்புரம் பழைய பஸ் நிலையத்தில் தொடங்கிய இப்பேரணியா னது முக்கிய வீதிகள் வழியாக சென்று ஆஞ்சநேயா திருமண மண்டபத்தில் முடிவடைந்தது, அதனை தொடர்ந்து அங்கு நடைபெற்ற கலை விழாவிற்கு அங்காள பரமேஸ்வரி பம்பை, உடுக்கை, சிலம்பு கலைஞர்கள் நலச் சங்க தலைவர் பாலு தலைமை தாங்கினார். செயலாளர் தண்டபாணி வரவேற்றார். தமிழ்நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைவர் காணை சத்தியராஜ் கலந்துகொண்டு சங்கரதாஸ் சுவாமிகளின் உருவ படத்தை திறந்து வைத்து பேருரையாற்றினார். பொருளாளர் சக்திவேல், சங்கரதாஸ் சுவாமிகள் படத்திற்கு தீபாராதனை செய்தார். டாக்டர் லட்சுமணன் எம்.எல்.ஏ., முன்னாள் நகரமன்ற தலைவர் ஜனகராஜ், நகரமன்ற தலைவர் தமிழ்செல்வி பிரபு ஆகியோர் சிறப்புரையாற்றினர். தமிழ் நாடு கலைத்தாய் அனைத்து நாட்டுப்புற கலைஞர்கள் நலச்சங்க மாநில தலைமை ஆலோசகர் பழனி, மாவட்ட தலைவர் செல்வம், பொருளாளர் மாயவன், தழுதாளி மாவட்ட செயலாளர் பெருமாள், மேல்மலையனூர் அங்காளம்மன் கோவில் தர்மகர்த்தா சுப்பிரமணி ஆகியோர் வாழ்த்துரை வழங்கினர், இவ்விழாவில் நலிந்த கலைஞர்களுக்கு வழங்கும் ஓய்வூதியத்தை எளிய முறையில் வழங்க ஆவண செய்ய வேண்டும், நலவாரியத்தின் மூலமாக இயற்கை மரணம் அடையும் கலைஞருக்கு வழங்கப்படும் ரூ.25 ஆயிரம் நிதியை ரூ.1 லட்சமாக உயர்த்தி தர வேண்டும், அரசின் நலத்திட்ட செயல்பாடுகள் முறையாக கிடைக்க ஆவண செய்ய வேண்டும் என்பன போன்ற பல்வேறு தீர்மானங் கள் நிறைவேற்றப்பட்டன, இவ்விழாவில் நிர்வாகிகள் உத்திரகுமார், மணி, கலிவரதன், சர்க் கரை, வடிவேல், குமார், வெற்றிவேல், காசிநாதன், பாலு, தளக்குளம் சிவக்குமார் உள்பட பலர் கலந்துகொண்டனர். விழாவை யொட்டி நாட்டுப்புற கலைஞர்களின் பல்வேறு கலை நிகழ்ச்சிகள் நடைபெற்றன.

Tags

Next Story