தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்றணும் !
தேர்தல் நடத்தை விதிகளை முறையாக பின்பற்ற வேண்டும் என தர்மபுரி மாவட்ட தேர்தல் அலுவலர் சாந்தி அறிவுறுத்தியுள்ளார்.
தர்மபுரி நாடாளுமன்ற தொகுதிக்குட்பட்ட பாலக்கோடு, பென்னாகரம், தர்மபுரி, பாப்பிரெட்டிப்பட்டி, அரூர் (தனி), மேட்டூர் ஆகிய 6 சட்டமன்ற தொகுதிகளின் உதவி தேர்தல் நடத்தும் அலுவலர்களால் திருமண மண்டபங்கள், நகை அடகு கடைகள், பத்திரிக்கை அச்சகங்கள் போன்றவற் றின் உரிமையாளர்களுக்கு ஆய்வு கூட்டம் நடத்தப் பட்டு, தேர்தல் தொடர் பான நடத்தை விதிகள், விதிமுறைகள் குறித்து உரிய அறிவுரைகள் வழங்கப்பட்டது.
திருமண மண்டபங்களில் ஆலோசனை கூட்டம் நடத்த, முறையாக தேர்தல் பிரிவில் அனுமதி பெற வேண்டும். அரசியல் கட்சி நிர்வாக கூட்டங்கள் அனுமதிக்க கூடாது. கட்சி சார்ந்த கூட்டம் நடத்த அனுமதி பெற வேண்டும். காது குத்து போன்ற நிகழ்ச்சிகளில் அரசியல் பிரமுகர்கள் கலந்து கொண் டால்,அனுமதி பெறவேண்டும். நிகழ்ச்சி நடைபெறும் போது, மண்டபத்தின் அருகே கட்சிக்கொடிகள் பயன்படுத்த அனுமதி இல்லை. முறையற்ற பணபரிவர்த்தனைக்கு இடமளிக்க கூடாது.
அச்சகங்களில் தவறான வாசகங்கள் பிரகியோ கிக்க கூடாது. பிரதிகளின் எண்ணிக்கை நோட்டீஸில் இருக்க வேண்டும். பிரிண்டிங் பிரஸ் பெயர் நோட்டீஸில் பதிவு செய்யப்பட்டிருக்க வேண்டும். நகை அடகு கடைகளில் முறையற்ற பணப்பரிமாற் றம் அனைத்தும் அனைத்தும் கண்காணிக்கப்படும். நகை அடகுவைப்பது தொடர்பாக முறையான ரசீதினை வாடிக்கையாளர்களுக்கு வழங்க வேண்டும். இருப்பு வைத்திருக்கும் பணத்திற்கு, முறையான கணக்கு வைத்திருக்க வேண்டும்.
அரசியல் கட்சிகளின் தொடர்பு இன்றி நடத்தப்பட வேண்டும். மண்டப உரிமையாளர்கள், அச்சக உரிமை யாளர்கள், நகை அடகு கடை உரிமையாளர்கள் எழுப்பிய சந்தேகங்களுக்கு உரிய பதில்களும், அறிவு ரைகளும் வழங்கப்பட்டுள்ளது.திருமண மண்டப உரிமையாளர்கள், நகை கடை உரிமையாளர்கள் மற்றும் அச்சக உரிமையாளர்கள் தேர்தல் நடத்தை விதிகளை முழுமையாக பின்பற்ற வேண்டும். மீறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை மேற்கொள்ளப்படும். இவ்வாறு ஆட்சியர் சாந்தி வெளியிட்டுள்ள அறிக்கையில் தெரிவித்துள்ளார்.