அரசுபள்ளி மாணவிகளுக்கு உணவுகலப்படம் கண்டறிதல் விழிப்புணர்வு நிகழ்ச்சி
பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் உணவு பாதுகாப்பு துறை சார்பில் உணவு கலப்படம் கண்டறிதல் குறித்து விழிப்புணர்வு நிகழ்ச்சி நடந்தது.
தர்மபுரி மாவட்டம் பாலக்கோடு அரசு மகளிர் மேல்நிலைப் பள்ளியில் பாலக்கோடு காரிமங்கலம் ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் நந்தகோபால் மற்றும் இளநிலை உணவு பாகுப்பாய்வாளர் கோபி உள்ளிட்ட உள்ளிட்ட குழுவினர் நடமாடும் உணவு பகுப்பாய்வு வாகனம் மூலம் உணவு பாதுகாப்பு குறித்து விழிப்புணர்வு செய்தனர்.
உணவுகளில் கலப்படம் கண்டறிதல் மற்றும் உணவு பொருட்களின் காலாவதி தேதி உள்ளிட்டவற்றை கண்டறிவது குறித்து மாணவிகளுக்கு எடுத்துரைத்தனர். மேலும் இந்த நிகழ்ச்சியில் பள்ளியின் தலைமை ஆசிரியர் சங்கர் மற்றும் மணிமாலா மற்றும் ஆசிரியைகள் தலைமையில் மாணவிகள் 200க்கும் மேற்பட்டோர் பங்கு பெற்றனர்.
Next Story