தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து வழங்கப்பட்ட உணவு

தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து வழங்கப்பட்ட உணவு

குப்பை வண்டியில் வைத்து வழங்கப்பட்ட உணவு

பிரதமர் வருகைக்காக ஶ்ரீரங்கத்தை சுத்தம் செய்யும் தூய்மை பணியாளர்களுக்கு குப்பை வண்டியில் வைத்து உணவு வழங்கப்பட்ட அவலம்.
பாரதப் பிரதமர் நரேந்திரமோடி நாளை(20-01-2024) திருச்சி வருகை தருவதை முன்னிட்டு மாநகராட்சி சார்பில் ஸ்ரீரங்கம் பகுதியில் தூய்மை பணி தொடர்ச்சியாக நடைபெற்று வருகிறது. இந்நிலையில் அங்கு பணிபுரியும் தூய்மை பணியாளர்களுக்கு அம்மா உணவகத்தில் தயாரிக்கப்பட்ட உணவு வழங்கப்படுகிறது. அந்த உணவுகளை, சாக்கடை மற்றும் குப்பைகளை அள்ள பயன்படுத்தப்படும் TN 45 BS 4344 என்கிற எண்ணுள்ள, குப்பை வண்டியில் வைத்து எடுத்து சென்று தூய்மை பணியாளர்களுக்கு வழங்கப்படும் அவலம் நடைபெற்றுள்ளது. தூய்மை பணியாளர்களும் மனிதர்கள் தானே? இத்தகைய செயலை செய்ய எவ்வளவு பெரிய கல் நெஞ்சு வேண்டும் ? இதுபோன்ற குப்பை லாரியில், குப்பை கூளங்களோடு வைத்து உணவு கொண்டு வரப்பட்டு, அதனை சாப்பிட சொன்னால், ஏசி அறையில் அமர்ந்து ஃபைல் பார்க்கும் அதிகாரிகள் சாப்பிடுவார்களா ? சமூக அநீதி அல்லவா இது தூய்மை பணியாளர்களுக்கு அலட்சியமாகவும், சுகாதாரமற்ற முறையில் உணவை கொண்டு சென்று விநியோகம் செய்தவர்கள் யாராக இருந்தாலும், அந்த நபர்கள் மீது துறை சார்ந்த கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே இந்த மாபெரும் நேரில் பார்த்தவர்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story