உணவு தயாரிப்பு: புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை

உணவு தயாரிப்பு: புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை

ஆட்சியர் அறிவுரை

மாணவர்களுக்கான உணவு தயாரிப்பில் சுகாதாரத்தை கடைபிடிக்க வேண்டும் என புதுக்கோட்டை ஆட்சியர் அறிவுரை வழங்கியுள்ளார்.

முதலமைச்சரின் காலை உணவுத் திட்டத்தில் மாணவர்களுக்கான உணவை சுகாதாரமான முறையில் தயாரிக்க வேண்டும் என்று புதுகை ஆட்சியர் அறிவுறுத்தினார்.

தமிழக அரசின் அனைத்து நலத்திட்டங்களும் தங்குத் தடை மின்னி மக்களை சென்றடைவதை உறுதி செய்யும் நோக்கில், 'உங்களைத் தேடி உங்கள் ஊரில்' எனும் திட்டம் செயல்பட்டு வருகிறது. திட்டத்தின் முதல் நாளான புதன்கிழமை பொன்னமராவதி வட்டத்தில் மாவட்ட ஆட்சியர் ஜ.சா. மெர்சி ரம்யா பல்வேறு அரசு அலுவலகங்கள், கல்வி நிறுவனங்கள், வளர்ச்சிப் பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார்.

இதன் தொடர்ச்சியாக பொன்னமராவதி பேரூராட்சிக்குள்பட்ட பல்வேறு இடங்களில் பல்வேறு பணிகளையும், அரசின் சேவை, திட்ட அமலாகங்களையும் ஆட்சியர் ஆய்வு செய்தார். கொன்னையூர்ஊராட்சி ஒன்றிய தொடக்கப்பள்ளியில் முதலமைச்சர் காலை உணவு திட்டத்தின் கீழ் உணவுகள் சமைக்கப்பட்டு பணியை ஆய்வு செய்து, உணவுகளை அட்டைவணயின் படி சுகாதாரமான முறையில் தயாரித்து மாணவர்களுக்கு வழங்க மாவட்ட ஆட்சியர் பணியாளர்களை அறிவுறுத்தினார்.

நிகழ்வில் வட்டாட்சியர் எம். சாந்தா, பேரூராட்சி செயல் அலுவலர் மு.செ. கணேசன் மற்றும் பல்வேறு துறை சார்ந்த அலுவலர்கள் உடனிருந்தனர்...

Tags

Next Story