உணவு பொருட்களின் விலை பட்டியல் வெளியீடு

உணவு பொருட்களின் விலை பட்டியல் வெளியீடு

கோப்பு படம்

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்படுகிறது.

விருதுநகர் சந்தையில் அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலைப் பட்டியல் வாரந்தோறும் வெளியிடப்படுகிறது. அதன் விபரம் வருமாறு : முண்டு வத்தல் புதுசு வகை கடந்த வாரம் 100 கிலோ ரூ.12 ஆயிரம் முதல் 16 ஆயிரம் வரை விற்கப்பட்டது. இந்த வாரம் குவிண்டால் ஒன்றுக்கு ரூ.1000 வரை உயர்வு ஏற்பட்டுள்ளது.

எனவே, ரூ.13ஆயிரம் முதுல் 17 ஆயிரம் வரை விற்கப்படுகிறது. துவரம் பருப்பு புதுசு நாடு வகை கடந்த வாரம் 100கிலோ ரூ.12,500 என விற்பனையானது. இந்த வாரம் ரூ.500 குறைவு ஏற்பட்டு ரூ.12ஆயிரத்திற்கு விற்பனை செய்யப்படுகிறது. உருட்டு உளுந்தம் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.12,100 என விற்கப்பட்ட நிலையில், இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைக்கப்பட்டு தற்போது ரூ.12ஆயிரத்திற்கு விற்பனையாகிறது.

தொலி உளுந்தம் பருப்பு 100 கிலோ ரூ10,100 என விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டைக்கு ரூ.150 வரை உயர்த்தப்பபட்டு ரூ.10,250 என்ற விலைக்கு விற்கப்படுகிறது. பாசிப் பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.10,350 என விறக்கப்பட்டது.இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.50 உயர்த்தப்பட்டு தற்போது ரூ.10,400 என விற்பனை செய்யப்படுகிறது. பட்டாணி பருப்பு 100 கிலோ கடந்த வாரம் ரூ.5400 என விற்கப்பட்டது.

இந்த வாரம் குவிண்டாலுக்கு ரூ.100 குறைந்துள்ளது. எனவே, ரூ.5300 கக்கு விற்கப்படுகிறது. உளுந்து லயன் வகை 100 கிலோ கடந்த வாரம் ரூ.10ஆயிரத்திற்கு விற்கப்பட்டது. இந்த வாரம் மூட்டை ஒன்றுக்கு ரூ.200 அதிகரித்துள்ளது. எனவே, ரூ.10,200க்கு விற்பனையாகிறது. பிற அத்தியாவசிய உணவுப் பொருட்களின் விலையில் எவ்வித மாற்றமும் ஏற்படவில்லை.

Tags

Read MoreRead Less
Next Story