உணவு பதப்படுத்தும் தொகுப்பு - தொழில் முனைவேருடன் ஆட்சியர் ஆலோசனை
ஆலோசனை கூட்டம்
கிருஷ்ணகிரி மாவட்ட ஆட்சியர் அலுவலக கூட்டரங்கில், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை சார்பாக, உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்க தொழில் முனைவேருடன் ஆலோசனைக் கூட்டம் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தலைமையில் நடைபெற்றது. இந்நிகழ்வில் மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்ததாவது: வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை, தருமபுரி விற்பனைக்குழுவின் கட்டுப்பாட்டில் உள்ள கிருஷ்ணகிரி மாவட்டம், சூளகிரி வட்டம் சென்னம்பள்ளியில் 10 ஏக்கர் நிலப்பரப்பில் ரூ.26.82 கோடி மதிப்பீட்டில் உணவு பதப்படுத்தும் தொகுப்பு அமைக்கப்பட்டுள்ளது மேற்படி 5 ஏக்கர் நிலப்பரப்பில் முதலீட்டாளர்களின் பொது பயன்பாட்டிற்காக 5000 மெ.டன் கொள்ளளவு கொண்ட குளிர்பதனக்கிடங்கு, 2500 மெ.டன் கொள்ளளவு கொண்ட சேமிப்பு கிடங்கு, தரம்பிரிப்பு மையம், அலுவலகத்துடன் கூடிய உணவகம் மற்றும் 60 மெ.டன் எடைதிறன் கொண்ட மின்னணு எடை மேடை ஆகிய கட்டமைப்புகளை கட்டண அடிப்படையில் பயன்படுத்திக்கொள்ள ஏற்படுத்தப்பட்டுள்ளது.
மீதமுள்ள 5 ஏக்கர் நிலத்தினை உணவு பதப்படுத்தும் தொழில் முனைவோருக்கு நீண்ட கால குத்தகை அடிப்படையில் ஐந்து முதலீட்டாளர்களுக்கு ஒதுக்கீடு செய்ய உத்தேசிக்கப்பட்டுள்ளது. மேற்படி, உணவு பதப்படுத்தும் தொகுப்பினை பயன்பாட்டிற்கு கொண்டு வரும் பொருட்டு முதலீட்டாளர்கள் கூட்டம் நடத்தப்பட்டது. என மாவட்ட ஆட்சித்தலைவர் கே.எம்.சரயு தெரிவித்தார்.
இக்கூட்டத்தில், மாவட்ட வேளாண் இணை இயக்குநர் பச்சையப்பன், மாவட்ட ஆட்சியரின் நேர்முக உதவியாளர் (வேளாண்மை) சீனிவாசன், வேளாண்மை விற்பனை மற்றும் வேளாண் வணிகத்துறை விற்பனைக்குழு செயலாளர் ரவி, வேளாண் துணை இயக்குநர் (வேளாண் வணிகம்) காளிமுத்து, தோட்டக்கலை துணை இயக்குநர் செந்தில்குமார், பையூர் தோட்டக்கலை கல்லூரி முதல்வர் டாக்டர் அனிசாராணி மற்றும் தொழில் முதலீட்டாளர்கள், வங்கி பிரதிநிதிகள் கலந்து கொண்டனர்.