குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

குட்கா விற்பனை செய்த கடைக்கு சீல் - உணவு பாதுகாப்பு துறை நடவடிக்கை

கடைக்கு சீல் 

நாகையில் தடை செய்யப்பட்ட புகையிலைபொருட்கள் விற்ற கடைக்கு உணவு பாதுகாப்பு அலுவலர் சீல் வைத்தார்
நாகப்பட்டினம் வெளிப்பாளையம் காவல்நிலைய எல்லைக்கு உட்பட பகுதியில் இயங்கிவரும் கடையில் தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்யப்பட்டு முதல் தகவல் அறிக்கை பதிவு செய்யப்பட்டதின் அடிப்படையில் நாகப்பட்டினம், வெளிப்பாளையம்,பப்ளிக் ஆபீஸ் ரோட்டில் செயல்படும் கடையை, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, நாகப்பட்டினம் நகராட்சி உணவு பாதுகாப்பு அலுவலர் அ.தி.அன்பழகன், நேற்று பூட்டி சீல் வைத்தார். ரூபாய் இருபத்தி ஐந்தாயிரம் அபராதம் விதிக்கப்படுவதோடு, 15 நாட்கள் கடை பூட்டப்படும். எனவே வணிக நிறுவனங்கள் நடத்துவோர் தயவுசெய்து புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதை கைவிட்டு தொழில் நடத்த வேண்டும். தடைசெய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் / தகவல் தெரிவிக்க வேண்டுகிறோம். புகார்தாரர் குறித்து ரகசியம் பாதுகாக்கப்படும்.

Tags

Next Story