சத்தியமங்கலம் டீக்கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு!
அதிகாரிகள் திடீர் ஆய்வு
சத்தியமங்கலம் டீ கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் ஆய்வு ஈரோடு மாவட்ட, கலெக்டர் உத்தரவின்படி சத்தி நகராட்சி பஸ் நிலையம் மற்றும் நகர் பகுதியில் உள்ள டீ கடைகள், பேக்கரி கடைகளில் உணவு பாதுகாப்பு துறை அதிகாரிகள் திடீர் அய்வு மேற்கொண்டனர்.
கடைகளில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட கேரி பேக் பயன்படுத்தப்படுகிறதா எனவும் பஜ்ஜி,போண்டா போன்ற எண்ணெய் பலகாரங்களை வாடிக்கையாளர்களுக்கு நியூஸ் பேப்பரில் வைத்து சாப்பிட தருகிறார்களா என உணவு பாதுகாப்பு அலுவலர் நீலமேகம் தலைமையில் நகராட்சி துப்புரவு ஆய்வாளர் ஆரோக்கியசாமி மற்றும் சுகாதார மேற்பார்வையாளர்கள் ஆய்வு செய்தனர்.
17 கடைகளில் ஆய்வு செய்ததில் நியூஸ் பேப்பரில் வைத்து வாடிக்கையாளர்களுக்கு கொடுத்த 3 கடைகளுக்கு ரூபாய் 3000 ரூபாயும், தடை செய்யப்பட்ட கேரி பேக்குகள் பயன்படுத்திய 2 கடைகளுக்கு 4000 ரூபாய் அபராதம் விதிக்கப்பட்டது.
மேலும் பலகாரங்களை திறந்த வெளியில் வைத்து விற்பனை செய்யக்கூடாது எனவும் தயாரிக்கும் இடம் சுகாதாரமாக இருக்க வேண்டும் எனவும் பணியாளர்கள் தலைக்கவசம், முக கவசம், கையுறை அணிய வேண்டும். பெற்றுக் கொள்ள வேண்டும் எனவும், வியாபாரம் செய்யும் கடைகளுக்கு உணவு பாதுகாப்புச் சட்டத்தின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளப்படும் எனவும் அறிவுறுத்தப்படட்டது.