உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு
தென்காசியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசியில் உணவு பாதுகாப்பு அலுவலர் ஆய்வு மேற்கொண்டார்.
தென்காசி மாவட்ட ஆட்சியர் உத்தரவின்படி, உணவு பாதுகாப்பு அலுவலர் வெங்கடேஸ்வரன் தலைமையில் தென்காசி மாவட்டம் சிவகிரி அருகிலுள்ள தேவிபட்டினம் பகுதியில் ஆய்வு மேற்கொண்டார். அப்போது மந்தை பகுதியில் உள்ள ஜோதிமணி என்பவருக்கு சொந்தமான கடையில், பருப்பு மூட்டைகளுக்குள் தடை செய்யப்பட்ட புகையிலை பொருட்கள் விற்பனை செய்வதற்காக வைத்திருந்தது கண்டுபிடிக்கப்பட்டது. இதனைத் தொடர்ந்து புகையிலை பொருட்களை பறிமுதல் செய்து கடைக்கு சீல் வைக்கப்பட்டது. இதில் கடை உரிமையாளர் மீது வழக்கு பதிவு செய்தும் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.
Next Story