பலா பழ சுலை விற்பனை கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை !

பலா பழ சுலை விற்பனை கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை !

சோதனை

நாகையில் பலா பழ சுலை விற்பனை கடையில் உணவு பாதுகாப்பு அலுவலர்கள் சோதனை நடந்தது.

நாகப்பட்டினம் கடைத்தெரு ஆரம்பத்தில் தெருவோரம் விற்பனை செய்யப்படும் பலாப்பழம் சுகாதாரமற்ற முறையில் இருப்பதாக மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு வந்த புகாரையடுத்து, நாகப்பட்டினம் மாவட்ட உணவு பாதுகாப்பு நியமன அலுவலர் டாக்டர் புஷ்பராஜ் உத்தரவின்படி, ஆய்வு மேற்கொள்ளப்பட்டது.

நான்கு தெருவோர கடைகளில் சுகாதாரமற்ற முறையில் ஈக்கள் மொய்க்கும் நிலையில் விற்பனை மேற்கொண்டு இருந்த கடைகளின் உரிமையாளர்கள் நாளை முதல் கண்ணாடி பெட்டிக்குள் வைத்து மட்டுமே பலாப்பழம் விற்பனை செய்யப்பட வேண்டும், பலாப்பழத்தை கையாள்பவர் தன் சுத்தம் பேண வேண்டும்,தவறும் பட்சத்தில் பலாப்பழம் கைப்பற்றப்பட்டு அழிக்கப்படுவதோடு, உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய சட்ட விதிகளின்படி அபராதம் விதிக்கப்பட்டு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று எச்சரிக்கை செய்யப்பட்டது.

சுகாதாரமற்ற முறையில் பாதுகாப்பு இல்லாமல் உணவு விற்பனை நடைபெறுவது குறித்து மாநில உணவு பாதுகாப்பு ஆணையருக்கு 9444042322 என்ற வாட்ஸ்அப் எண்ணில் புகார் தெரிவிக்கலாம், புகார்தாரர் ரகசியம் பாதுகாக்கப்படும்.

Tags

Next Story