தூத்துக்குடியில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு பண்டங்கள் பறிமுதல்

தூத்துக்குடியில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு பண்டங்கள் பறிமுதல்

கோப்பு படம் 

தூத்துக்குடி பஸ் நிலையத்தில் திறந்த வெளியில் வைக்கப்பட்ட உணவு பண்டங்கள் பறிமுதல் செய்யப்பட்டது.

தூத்துக்குடி பழைய பஸ் நிலையத்தில் உள்ள கடைகளில் உணவு பண்டங்கள் திறந்த வெளியில் உள்ளதா, உணவு பொருட்களை வினியோகிக்க அச்சிட்ட காகிதங்கள் பயன்படுத்தப்படுகிறதா?,

உரிமம் உள்ளதா? என்பது குறித்து தூத்துக்குடி மாவட்ட உணவு பாதுகாப்புத் துறை நியமன அலுவலர் ச.மாரியப்பன் மற்றும் கோவில்பட்டி ஒன்றிய உணவு பாதுகாப்பு அலுவலர் செல்லப்பாண்டி ஆகியோர் திடீர் ஆய்வு மேற்கொண்டனர்.

அப்போது, ஒரு கடையில் திறந்தவெளியில் வைக்கப்பட்டிருந்த 10 கிலோ வடை உள்ளிட்ட உணவுப் பண்டங்களும், ஒரு கிலோ அனுமதியற்ற பிளாஸ்டிக் பொருட்களும் பறிமுதல் செய்யப்பட்டு அழிக்கப்பட்டன. மற்றொரு டீக்கடையில் தமிழக அரசால் தடை செய்யப்பட்ட பான்மசாலா 78 கிராம் மட்டும் கண்டறியப்பட்டது.

எடை குறைவாக இருந்தாலும், தடை செய்யப்பட்ட பொருட்கள் வைத்திருந்த குற்றம் குறித்தான தொடர் விசாரணைக்காக, அக்கடை உடனடியாக மூடப்பட்டது. இதனால் அப்பகுதியில் பரபரப்பு ஏற்பட்டது.

Tags

Next Story