சர்க்கரை நோயாளிகளுக்கான பாத பாதிப்பு கண்டறிதல் முகாம் 

சர்க்கரை நோயாளிகளுக்கான பாத பாதிப்பு கண்டறிதல் முகாம் 
மருத்துவ முகாம் 

தஞ்சாவூர் மாவட்டம், பேராவூரணி அருகே உள்ள செருவாவிடுதி அரசு ஆரம்ப சுகாதார நிலையத்தில், தமிழ்நாடு அரசு, பொது சுகாதாரம் மற்றும் நோய்த்தடுப்பு மருந்துத் துறை மற்றும் தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை இணைந்து, சர்க்கரை நோயாளிகளுக்கான பாத பாதிப்பு கண்டறிதல் முகாம் நடைபெற்றது.

இம்மருத்துவ முகாமை பேராவூரணி சட்டப்பேரவை உறுப்பினர் நா.அசோக்குமார் தலைமை வகித்து, குத்துவிளக்கேற்றி துவக்கி வைத்தார். வட்டார மருத்துவ அலுவலர்கள் அருள் (பேராவூரணி), ராமலிங்கம் (சேதுபாவாசத்திரம்) முன்னிலை வகித்தனர், மருத்துவர் ரஞ்சித் வரவேற்றார். தஞ்சாவூர் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை, சிறப்பு மருத்துவர்கள் ரத்தநாள அறுவை சிகிச்சைத்துறை எஸ்.மருதுதுரை, பொது அறுவை சி‌கி‌ச்சைத் துறை எம்.செந்தில்குமரன், ஒட்டுறுப்பு சிகிச்சைத் துறை சஞ்சீவி, கண் சிகிச்சைத்துறை காமேஸ்வரி ஆகியோர் அடங்கிய மருத்துவக் குழுவினர் சர்க்கரை நோயாளிகளுக்கு பாதங்களை பரிசோதனை செய்து மருத்துவ ஆலோசனை வழங்கினர்.

மேல் சிகிச்சைக்காக தஞ்சைக்கு 59 நோயாளிகள் பரிந்துரை செய்யப்பட்டனர். நிகழ்ச்சியில், திமுக தலைமை பொதுக்குழு உறுப்பினர் அ.அப்துல் மஜீத், ஒன்றியச் செயலாளர் கோ.இளங்கோவன், திமுக தஞ்சை தெற்கு மாவட்ட மருத்துவ அணி அமைப்பாளர் டாக்டர் வி.சௌந்தரராஜன், நெசவாளர் அணி அமைப்பாளர் த.பன்னீர்செல்வம், திமுக இளைஞர் அணி அமைப்பாளர் ஆர்.கே.பி.குமார், செருவாவிடுதி தெற்கு ஊராட்சி மன்றத் தலைவர் தங்க.ராமஜெயம், மருத்துவர்கள் பொன்.அறிவானந்தம், பொன்மணி மேகலா, வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சந்திரசேகர், மருந்தாளுநர் சரவணன், செவிலியர்கள், மருத்துவப் பணியாளர்கள் கலந்து கொண்டனர்.

Tags

Next Story