எங்களது ஓட்டு நோட்டாவிற்கே: அதிரடி முடிவு எடுத்த களப்பணியாளர்கள் !

எங்களது ஓட்டு நோட்டாவிற்கே: அதிரடி முடிவு எடுத்த களப்பணியாளர்கள் !

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.  

நாடாளுமன்றத் தேர்தலில் தமிழகத்தை சேர்ந்த PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் நோட்டாவுக்கு வாக்களிக்க திட்டமிட்டுள்ளனர்.

PACL முதலீட்டாளர்களுக்கு முதலீட்டு தொகையை திருப்பித்தர நடவடிக்கை எடுக்காததை கண்டித்து வருகிற 19ம் தேதி நடைபெறும் லோக்சபா தேர்தலில் சுமார் 1 கோடி பேர் நோட்டாவிற்கு வாக்களிக்க உள்ளதாக விவசாயிகள் முன்னேற்ற கழகத்தினர் தெரிவித்துள்ளனர்.

இது குறித்து விவசாயிகள் முன்னேற்றக்கழக தலைவர் செல்ல ராசாமணி நாமக்கல்லில் செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில் கூறியதாவது.... இந்தியா முழுவதும் PACL என்ற நிதி நிறுவனத்தில், 5 கோடியே 85 லட்சம் முதலீட்டாளர்கள், ரூ. 49 ஆயிரத்து 100 கோடி முதலீடு செய்துள்ளனர். இந்த நிறுவனத்தில் தமிழகத்தைச் சேர்ந்த சுமார் 1 கோடி முதலீட்டாளர்கள் ரூ. 10 ஆயிரம் கோடி முதலீடு செய்துள்ளனர். PACL நிறுவனம் செயல்படுவதற்கு, கடந்த 2016ம் ஆண்டு சுப்ரீம் கோர்ட் தடை விதித்தது. இதையொட்டி ஓய்வுபெற்ற சுப்ரீம் கோர்ட் நீதிபதி லோதா தலைமையில் அமைக்கப்பட்ட கமிட்டி, 6 மாதத்திற்குள், PACL முதலீட்டாளர்களுக்கு வட்டியுடன் முதலீட்டுப்பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என உத்தரவிட்டது. 8 ஆண்டுகள் ஆகியும் இதுவரை முதலீட்டாளர்களுக்கு பணம் திருப்பி வழங்கப்படவில்லை.

இந்தப்பணத்தை திருப்பி வழங்க வேண்டும் என்று PACL முதலீட்டாளர்கள், களப்பணியார்கள் மற்றும் விவசாய முன்னேறக்கழகத்தினர் பல்வேறு போராட்டங்களை நடத்தியுள்ளோம். கடந்த பிப்ரவரி. 25ம் தேதி நாமக்கல் அருகே நடைபெற்ற PACL முதலீடு மீட்பு மாநாட்டில், இந்த ஆண்டு நடைபெற உள்ள நாடாளுமன்ற தேர்தலில், PACL முதலீட்டாளர்களுக்கு பணத்தை திருப்பி வழங்குவதாக வாக்குறுதி அளிக்கும் அரசியல் கட்சிக்கு மட்டுமே ஓட்டளிப்பது என தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. கடைசியாக வெளியிடப்பட்ட பாஜக தேர்தல் அறிக்கையில் கூட PACL முதலீட்டாளர்களுக்கான பணத்தை திரும்பி வழங்குவது குறித்து எவ்வித அறிவிப்பும் வெளியிடப்படவில்லை.

எனவே வருகிற 19ம் தேதி நடைபெற உள்ள தேர்தலில், தமிழகத்தை சேர்ந்த சுமார் 1 கோடி PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் குடும்பத்தினர் அனைவரும், நோட்டா சின்னத்திற்கு வாக்களித்து தங்களின் கோரிக்கைகளை அரசியல் கட்சிகளுக்கு அறிவுறுத்த உள்ளோம். இந்த நிலையில், கரூர் லோக்சபா தொகுதியில், விவசாய முன்னனேற்றக்கழகம், PACL முதலீட்டாளர்கள் மற்றும் களப்பணியாளர்கள் ஆதரவுடன் போட்டியிடும் வேட்பாளர் சக்திவேலுக்கு மட்டும் ஆதரவளிப்பது என முடிவு செய்யப்பட்டு உள்ளது. இவ்வாறு செல்ல. ராசாமணி தெரிவித்தார். பேட்டியின் போது விவசாய முன்னேற்றக்கழக பொதுச் செயலாளர் பாலசுப்ரமணியம், பொருளாளர் ராமசாமி உள்ளிட்டோர் உடன் இருந்தனர்.

Tags

Next Story