வாடகைக்கு... ராணுவத்தினர் மாளிகையில் உள்ள கடைகள் !

வாடகைக்கு... ராணுவத்தினர் மாளிகையில் உள்ள கடைகள் !
ஆட்சியர் தீபக் ஜேக்கப்
தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில் உள்ள கடைகள், அலுவலக அறைகள் வாடகைக்கு விடப்படுகின்றன.

முன்னாள் படைவீரர் நலத்துறையை சார்ந்த, தஞ்சாவூர் ராணுவத்தினர் மாளிகையில், 4 கடைகள் மற்றும் 2 அலுவலக அறைகள் காலியாக உள்ளது. இக்கடைகள் மற்றும் அலுவலக அறைகள் மாதாந்திர உரிமக் கட்டணம் அடிப்படையில் வாடகைக்கு வழங்கிட ஒப்பந்த விலைப்புள்ளிகள் கோரப்படுகிறது. கடை எண்.8,11,13 மற்றும் 15 ஆகியவை தலா 266 சதுர அடியும் குறைந்தபட்ச உரிமக் கட்டணம் பிரதி மாதம் ரூ.4692 + 18 விழுக்காடு ஜிஎஸ்டி மற்றும் அலுவலக அறை எண்.23, (1985 சதுர அடி) குறைந்தபட்ச உரிமக்கட்டணம் ரூ.32,415+ 18 விழுக்காடு ஜிஎஸ்டி, அலுவலக அறை எண்.24, (1830 சதுர அடி) குறைந்தபட்ச உரிமக்கட்டணம் பிரதி மாதம் ரூ.29,884+ 18 விழுக்காடு ஜிஎஸ்டி ஆகும். உரிமக் கட்டணம் ஒப்பந்தம் 11 மாதங்களுக்கு ஒரு முறை 8 விழுக்காடு அடிப்படையில் உயர்த்தப்படும்.

முன்வைப்புத் தொகையானது உரிம கட்டணத்தின் 11 மாதங்களுக்கான மொத்த தொகையை செலுத்த வேண்டும். எனவே, விருப்பம் உள்ளோர் 12-01-2024 அன்று மாலை 5 மணிக்குள் தங்களது ஒப்பந்த விலைப்புள்ளியினை மூடிய உறையில் முத்திரையிடப்பட்டு கடை எண்:--------------க்கான ஒப்பந்த விலைப்புள்ளி என்பதனை தெளிவாக குறிப்பிட்டும், செயலாளர், ராணுவத்தினர் மாளிகை, தலைமை தபால் நிலையம் எதிரில், தஞ்சாவூர்-1 என்னும் முகவரிக்கு சமர்ப்பிக்குமாறு தெரிவிக்கப்படுகிறது. தாமதமாக பெறப்படும் ஒப்பந்த விலைப்புள்ளிகள் எக்காரணத்திற்காகவும் ஏற்றுக் கொள்ளப்படமாட்டாது. மேலும், ஒப்பந்த விலைப்புள்ளியின் மீது, தஞ்சாவூர் மாவட்ட ராணுவத்தினர் மாளிகை நிர்வாகத்தின் முடிவே இறுதியானது என தஞ்சாவூர் மாவட்ட ஆட்சித்தலைவர் தீபக் ஜேக்கப் தெரிவித்துள்ளார்.

Tags

Next Story