விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு சர்ப்ரைஸ் கொடுத்த நாமக்கல் கலெக்டர்

மாணவிகளுடன் ஆட்சியர்
விளையாட்டு விடுதி மாணவிகளுக்கு காலணிகள் வழங்கினார் நாமக்கல் மாவட்ட ஆட்சியர் ! நாமக்கல் மாவட்ட ஆட்சியர் அலுவலக பெருந்திட்ட வளாகத்தில் அமைந்துள்ள மாவட்ட விளையாட்டு மைதானத்தில் செயல்பட்டு வரும் விளையாட்டு விடுதியில் மாவட்ட ஆட்சியர் ச.உமா ஆய்வு மேற்கொண்டார்.
விளையாட்டு விடுதியில் ஆய்வு மேற்கொண்ட மாவட்ட ஆட்சியர் சமையலறையில் மாணவிகளுக்கு வழங்கப்படும் உணவு பட்டியலை பார்வையிட்டு, உணவுப் பொருட்களின் இருப்பு குறித்து ஆய்வு மேற்கொண்டார். மேலும் மாணவிகள் தங்கும் அறையில் மின் விளக்கு, மின் விசிறி, படுக்கை வசதிகள் மற்றும் குடிநீர் வசதி உள்ளிட்டவை குறித்து ஆய்வு மேற்கொண்டு மாணவிகளுடன் கலந்துரையாடினார்.
தொடர்ந்து விளையாட்டு விடுதியில் பயிலும் 55 மாணவிகளுக்கு ரூ.1.10 இலட்சம் மதிப்பில் தமிழ்நாடு அரசு மூலம் வழங்கப்படும் விளையாடுவதற்கு அணியப்படும் காலணிகளை (Sports Shoes) மாவட்ட வழங்கி, மாணவிகளுக்கு அறிவுரை வழங்கினார்.
இந்த ஆய்வின் போது மாவட்ட விளையாட்டு அலுவலர் எஸ்.கோகிலா உட்பட துறை சார்ந்த அலுவலர்கள் கலந்து கொண்டனர்.
