பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்கு  பாராட்டு விழா

ஆசிரியர்களுக்கு பாராட்டு விழா

தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா நடந்தது.

நாமக்கல் மாவட்டம் குமாரபாளையத்தில் தமிழ்நாடு ஆரம்பப்பள்ளி ஆசிரியர் கூட்டணி சார்பில் பணி நிறைவு பெறும் ஆசிரியர்களுக்குப் பாராட்டு விழா வட்டார தலைவர் சுப்பிரமணியம் தலைமையில் நடந்தது. பணி நிறைவு பெறும் குள்ளநாயக்கன்பாளையம் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் மாசிலாமணி, அன்னை சத்யா நகர் தொடக்கப்பள்ளி தலைமை ஆசிரியர் குமுதம்,

வெப்படை தொடக்கப் பள்ளி இடைநிலை ஆசிரியர் கண்ணன் ஆகியோருக்கு நினைவு பரிசு வழங்கப்பட்டது. மாவட்டச் செயலாளர் மாதேஸ் பேசியதாவது ஆசிரியர் பணி அனைத்து பணிகளிலும் சிறந்த பணியாகும். தனக்கு சிகிச்சை செய்த டாக்டரை, பல வருடம் கழித்து நேரில் பார்த்து,

அன்று நீங்கள் சிகிச்சை செய்தீர்கள், என்று யாரும் கூறுவது இல்லை. அந்த மருத்துவமனையை போய் பார்ப்பது இல்லை. நீதிமன்ற வழக்கில் நமக்கு சாதகமாக தீர்ப்பு வாங்கி கொடுத்த வக்கீல், மற்றும் நீதிபதியை யாரும் பல வருடங்கள் கழித்து நேரில் போய் பார்த்து, அன்று

எனது வழக்கில் வாதாடினீர்கள், நீங்கள் நல்ல தீர்ப்பு வழங்கினீர்கள், என்று யாரும் நீதிபதியை பார்த்து சொல்வது இல்லை. நீதிமன்றம் போய் பார்ப்பதும் இல்லை. ஆனால், தான் படித்த பள்ளியை பார்க்க வேண்டும் என்று போய் பார்ப்பது, தன்னால் ஆன உதவியை பள்ளிக்கு செய்வது, தனக்கு பாடம் கற்பித்த ஆசிரியர்களை நேரில் சந்தித்து வணங்கி ஆசி பெறுவது என்பது இன்றும் நடந்து வருகிறது. இது என்றும் நடக்கும். உங்கள் பணி ஓய்வு காலத்தை மற்றவர்களுக்கு உதவியாக இருக்கும்படி அமைத்து கொண்டு சிறந்து வாழ வேண்டும் இ

வ்வாறு அவர் பேசினார். வட்டார செயலர் பிரபு, ஓய்வு பெற்ற பள்ளி கல்லூரி ஆசிரியர் சங்கத்தின் மாநில இணை செயலாளர் நல்லாக்கவுண்டர், மாவட்டத் தலைவர் கலைச்செல்வன், மாவட்ட பொருளாளர் மலர்விழி, முன்னாள் வட்டார தலைவர் மாரி முத்து, முன்னாள் மாவட்ட செயலாளர் குமார் உள்பட பலர் வாழ்த்தி பேசினர். பணி நிறைவு பெறும் ஆசிரியர்கள் ஏற்புரை நிகழ்த்தினர்.

Tags

Next Story