விழுப்புரம் தொகுதிக்கு கூடுதலாக 2000 மின்னணு வாக்குபதிவு இயந்திரம்

விழுப்புரம் தொகுதிக்கு  கூடுதலாக 2000 மின்னணு வாக்குபதிவு இயந்திரம்

மாவட்ட தேர்தல் அலுவலர் 

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக 2000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் தெரிவித்துள்ளார்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுவதால், கூடுதலாக 2000 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளதாக தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தெரிவித்துள்ளார். இதுகுறித்து தேர்தல் நடத்தும் அலுவலர் பழனி தெரிவித்ததாவது: ஏப்ரல் 19ம் தேதி நடைபெறவுள்ள மக்களவைத் தேர்தலில் விழுப்புரம் தொகுதியில் 17 வேட்பாளர்கள் போட்டியிடுகின்றனர்.

ஒரு மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் 16 வேட்பாளர்களின் சின்னங்கள் மட்டுமே பொருத்தப்படும் நிலையில், விழுப்புரம் தொகுதியில் 17 வேட்பாளர்களுடன், நோட்டாவுக்கு வாக்களிக்க விரும்புவோர் வசதிக்காக நோட்டாவையும் மின்னணு வாக்குப்பதிவு இயந்திரத்தில் பொருத்த வேண்டியதுள்ளது. இதனால் ஒவ்வொரு வாக்குச்சாவடியில் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும்.

விழுப்புரம் மக்களவைத் தொகுதியில் 1966 வாக்குச்சாவடிகள் அமைக்கப்பட்டுள்ள நிலையில், இதற்கான மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் சரிபார்க்கப்பட்டு, தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளன. தற்போது ஒவ்வொரு வாக்குச்சாவடியிலும் 2 மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை உள்ளதால்,

கூடுதலாக 2000 இயந்திரங்களைத் தயார் நிலையில் உள்ளது. விழுப்புரத்திலுள்ள அரசு சேமிப்புக் கிடங்கில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தயார் நிலையில் உள்ளன. அவற்றை முதல் கட்டமாக சரிபார்க்கும் பணி விரைவில் தொடங்கும். அனைத்து இயந்திரங்களும் பயன்படுத்தும் நிலையில் உள்ளன என்றார் தேர்தல் நடத்தும் அலுவலரும், ஆட்சியருமான பழனி தெரிவித்துள்ளார்.

Tags

Next Story