இளம் விஞ்ஞானிகளுக்கு மருத்துவ அறிவியல் பயிற்சி

இளம் விஞ்ஞானிகளுக்கு  மருத்துவ அறிவியல் பயிற்சி
இளம் விஞ்ஞானிகளுக்கு பயிற்சி
ஆசாரிப்பள்ளம் அரசு மருத்துவக்கல்லூரியில் இளம் விஞ்ஞானிகளுக்கு மருத்துவ அறிவியல் பயிற்சி நடந்தது

கன்னியாகுமரி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனை மற்றும் குமரி அறிவியல் பேரவை சார்பில் இளம் விஞ்ஞானிகளுக்கு மருத்துவக் கல்லூரியில் வைத்து மருத்துவ அறிவியல் பயிற்சி வழங்கப்பட்டது.

நிகழ்ச்சியை மருத்துவ கண்காணிப்பாளர் டாக்டர் அருள்பிரகாஷ் தொடங்கிவைத்தார். குமரி அறிவியல் பேரவை அமைப்பாளர் முள்ளஞ்சேரி மு.வேலையன் அறிமுகவுரையாற்றினார். பேராசிரியர் டாக்டர் றோஸ்பெல் முதலுதவி செயல் விளக்கத்துடன் பயிற்சி அளித்தார்.

இளம்விஞ்ஞானி ஜெரிக் பின்னூட்டம் வழங்கினார். பேராசிரியர் டாக்டர் ஜூட் அன்செல்ம் சைராஸ் ,டாக்டர் கிருஷ்ணபிரசாத், டாக்டர்அன்பு ஆகியோர் கருத்துரை வழங்கினார்கள். அவசர சிகிச்சைப் பிரிவு டாக்டர் ஜெரோம், இதயவியல் மற்றும் கதிர்வீச்சு துறை டாக்டர்.வினேஷ், இரத்த வங்கி டாக்டர். முபாஷினி ,

நுண்ணுயிரியல் துறை டாக்டர். ஜோதி தடயவியல் மருத்துவம் மற்றும் போலீஸ் அறுவை சிகிச்சை துறை டாக்டர். ஆலன் ஜேம்ஸ் ,சமூக மருத்துவத் துறை டாக்டர் அன்பு, டாக்டர் பாத்திமா டாக்டர்.ஜெரோம், குழந்தை மருத்துவர்கள் டாக்டர்.ஷோமா - உடற்கூறியல் டாக்டர்.அர்ச்சனா -உயிர் வேதியியல் டாக்டர்.ஆரோன் - உயிர்வேதியியல் டாக்டர்.ஜெய தீபனா நுண்ணுயிரியல் அருங்காட்சியகம் டாக்டர் அனந்து ஆகியோர் பயிற்சியளித்தனர்.

Tags

Next Story