ஸ்ரீபெரும்புதுாரில் இளம் வாக்காளர்களுக்கு...'யூத் பூத்!'

ஸ்ரீபெரும்புதுாரில் இளம் வாக்காளர்களுக்கு...யூத் பூத்!

யூத் பூத் அமைப்பு

"ஸ்ரீபெரும்புதுாரில் இளம் வாக்காளர்களுக்கு...'யூத் பூத்! அமைக்கப்பட்டு அலுவலர்களாகவும் இளைஞர்களே நியமனம் செய்யப்பட்டுள்ளனர்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதுாரில் இளம் வாக்காளர்கள் அதிகமுள்ள ஓட்டுச்சாவடியில், 'யூத் பூத்' அமைக்க திட்டமிடப்பட்டு உள்ளது. இந்த ஓட்டுச்சாவடியில், அலுவலர்கள் அனைவரும் இளைஞர்களாகவே நியமிக்கப்பட உள்ளனர்.

மேலும், பணப் பட்டுவாடாவை தடுக்கவும் வங்கி பரிவர்த்தனையை கண்காணிக்கவும், வருமான வரித்துறை அதிகாரிகளுக்கு, சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் உத்தரவிட்டுள்ளார். காஞ்சிபுரம் கலெக்டர் வளாக கூட்டரங்கில், காஞ்சிபுரம் மற்றும் ஸ்ரீபெரும்புதுார் லோக்சபா தொகுதிகளுக்கான தேர்தல் செலவினம், கண்காணிப்பு,

தேர்தல் விதிமுறைகள் பற்றிய ஆய்வு கூட்டம், சிறப்பு செலவின பார்வையாளர் பாலகிருஷ்ணன் தலைமையில் நேற்று நடந்தது. இதில், காஞ்சிபுரம் கலெக்டர் கலைச்செல்வி, செங்கல்பட்டு கலெக்டர் அருண்ராஜ், தேர்தல் செலவின பார்வையாளர்கள் சந்தோஷ் சரண், மதுக்கர் ஆவேஸ், வருமான வரித் துறை கூடுதல் இயக்குனர் சுப்ரஜா, காஞ்சிபுரம் எஸ்.பி., சண்முகம், செங்கல்பட்டு எஸ்.பி., சாய் பிரணீத், மாவட்ட வருவாய் அலுவலர் வெங்கடேஷ் உள்ளிட்ட அதிகாரிகள் பங்கேற்றனர். தேர்தல் பணியின் முக்கிய பகுதியாக, ஓட்டுச்சாவடி வசதிகளில் உள்ள அடிப்படை வசதிகள் குறித்து அதிகாரிகள் கவனம் செலுத்தி வருகின்றனர்.

அங்குள்ள மின் வசதி, மின் விசிறி, லைட் ஆகியவை சரியாக உள்ளதா என சரி பார்க்கப்படுகிறது. தேர்தல் கமிஷன் அறிவுறுத்தல்படி, 100 சதவீத ஓட்டுப்பதிவை நடைமுறைப்படுத்த பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன.

ஒவ்வொரு சட்டசபை தொகுதிக்கும், மகளிர் ஓட்டுச்சாவடி ஒன்றும், 'மாடர்ன்' ஓட்டுச்சாவடி ஒன்றும் அமைக்கப்படும் என தெரிவிக்கப்பட்டிருந்தது.

Tags

Next Story