கட்டாய திருமணம் செய்த வாலிபர் கைது!
கைது
செய்யாறு அருகே பள்ளி மாணவியை கட்டாய திருமணம் செய்த வாலிபரை போலீசார் கைது செய்தனர்.
திருவண்ணாமலை மாவட்டம் செய்யாறு அடுத்த நாட்டேரி கிராமத்தைச் சேர்ந்த 18 வயது வாலிபர் 16 வயதுடைய பள்ளி மாணவியை காதலித்து ஆசை வார்த்தைகளை கூறி உல்லாசமாக இருந்துள்ளார். மாணவியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொண்டுள்ளார். மேலும் இது குறித்து வெளியில் கூறினால் குடும்பத்துடன் ஒழித்து விடுவேன் என கொலை மிரட்டல் விடுத்துள்ளார். இதுகுறித்த புகாரின் பேரில் செய்யாறு காவல் நிலைய போலீசார் வழக்குப்பதிவு செய்து வாலிபரை கைது செய்தனர்.
Next Story