வனத்துறையினர் 15 பேர் சுழற்சி முறையில் கண்காணிப்பு

வனத்துறையினர் 15 பேர் சுழற்சி முறையில் கண்காணிப்பு

வெட்டப்பட்ட கருங்காலி மரங்கள்

சிறுமலையில் விலங்குகளை வேட்டை, கருங்காலி மரங்களை வெட்டுவதை தடுக்க 15 பேர் கொண்ட வனத்துறை குழு தீவிர ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர்.
திண்டுக்கல்லை அடுத்த சிறுமலையில் விலங்குகளை வேட்டையாடுவதோடு கருங்காலி மரங்களை தேடி அலைகின்றனர். இதை கண்காணிக்கும் விதமாகவும், வன விலங்குகள் வேட்டையை தடுக்கவும் சிறுமலை வனத்துறை ரேஞ்சர் மதிவாணன் தலைமையில் வேட்டைத்தடுப்பு காவலர்கள் வனவர்,வனக்காப்பாளர்கள் என 15 பேர் தினமும் சுழற்சி முறையில் சிறுமலை வனப்பகுதியில் இரவு,பகல் ரோந்து பணியில் ஈடுபட்டுள்ளனர். கருங்காலி மரங்களை பதுக்கிய ஒருசிலர் கைது செய்யப்பட்டுள்ளனர் சிறுமலை செக்போஸ்டில் மர லோடுகள் ஏற்றி செல்லும் லாரிகளை தீவிரமாக சோதனை செய்வதாகவும் வனத்துறை அதிகாரிகள் தெரிவித்தனர். சிறுமலையில் அபரிவிதமான கருங்காலி மரங்கள் உள்ளன என்பதை அறிந்து சிலர் இவ்வாறு செயல்படுகின்றனர்.

Tags

Next Story