வீட்டில் புகுந்த காட்டு பூனையை பிடித்த வனத்துறையினர்

வீட்டில் புகுந்த காட்டு பூனையை பிடித்த வனத்துறையினர்

அருமனை அருகே வீட்டுக்குள் புகுந்து முயல்களை கடித்து குதறிய காட்டு பூனையை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

அருமனை அருகே வீட்டுக்குள் புகுந்து முயல்களை கடித்து குதறிய காட்டு பூனையை வனத்துறையினர் பிடித்து சென்றனர்.

அருமனை அருகே பத்துகாணி அடுத்த அத்திகரையில் ஆதி வாசி கிராமத்தை சேர்ந்தவர் மணி கண்டன். இவர் தனது வீட்டில் முயல்கள் வளர்த்து. வருகிறார். இந்த முயல் கூட்டில் ஒரு பெரிய காட்டுப் பூனை புகுந்தது. அந்த பூனை 4 முயல்களை கொன்று தின்ற நிலையில் கூட்டில் இருந்து வெளியே வர முடியாமல் சிக்கி கொண்டது. முயல் கூட்டில் சிக்கிய பூனையை அந்த பகுதியை சேர்ந்த மக்கள் பார்த்து புலி குட்டி என நினைத்தனர்.

இதனால் தாய் புலி அந்த பகுதியில் இருக்கலாம் என பெரும் பீதி அடைந்தனர். இதுகுறித்து வனத்துறைக்கு தகவல் கொடுக் கப்பட்டது. வனத்துறையினர் விரைந்து வந்த முயல் கூட் டில் சிக்கி இருந்த பூனையை பிடித்தனர். தொடர்ந்து அது புலிக்குட்டி அல்ல பெரிய காட்டுப் பூனை என வனத்து றையினர் தெரிவித்தனர். இதனால் அந்த பகுதியில் பரவிய பீதி தணிந்தது. தொடர்ந்து வனத்துறையினர் பிடித்த காட்டு பூனையை பேச்சிப்பாறை அருகே தொடலிக்காடு வனப்பகுதிகள் கொண்டு விட்டனர்.

Tags

Next Story