பிரிந்த குட்டியானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்!

பிரிந்த குட்டியானையை டிரோன் மூலம் கண்காணிக்கும் வனத்துறையினர்!

  கோவை மருதமலை அடிவாரத்தில் தாய் யானையை பிரிந்த குட்டியானையை டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.  

கோவை மருதமலை அடிவாரத்தில் தாய் யானையை பிரிந்த குட்டியானையை டிரோன் மூலம் வனத்துறையினர் கண்காணிக்கின்றனர்.

கோவை மருதமலை அடிவாரத்துக்கு உட்பட்ட பகுதியில் பெண் யானை ஒன்று உடல்நல குறைவால் மயங்கிய நிலையில் கிடந்தது. அதன் குட்டி பிளிறும் சத்தம் கேட்ட நிலையில் அப்பகுதியில் ரோந்து பணி மேற்கொண்ட வனத்துறையினர் இந்த யானையின் நிலையை கண்டறிந்து உயர் அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தனர். அதனைத் தொடர்ந்து சம்பவ இடத்திற்கு வந்த வனத்துறை உயர் அதிகாரிகள் மற்றும் கால்நடை மருத்துவர்கள் யானைக்கு சிகிச்சை அளிக்க தொடங்கினர்.

யானைக்கு குளுக்கோஸ் நீர் சத்து நிறைந்த உணவுகள்,மருந்துகள் அளிக்கப்பட்டதை தொடர்ந்து யானை ஓரளவு உடல்நிலை தேறிய நிலையில் கிரைன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்த மருத்துவர்கள் மற்றும் வனத்துறையினர் முடிவு செய்தனர்.பின்னர் கிரைன் உதவியுடன் யானையை தூக்கி நிறுத்திய வனத்துறையினர் யானையின் மீது தண்ணீரை பாய்ச்சி அடித்தனர்.இதனை தொடர்ந்து குட்டி யானையை தாய் யானையிடம் விட்டவுடன் அந்த குட்டி யானை தாய் யானையுடன் வந்து சேர்ந்தது.குட்டி யானை பால் குடித்ததை தொடர்ந்து பெண் யானை உடல் நிலை தேறி காணப்பட்டது.

forest department monitors the separated cub with a drone!இருப்பினும் நடக்க முடியாமல் இருந்ததால் அந்த பெண் யானைக்கு உணவளிக்க வனத்துறையினர் முயற்சித்து வந்த நிலையில் தற்போது உடல்நலம் தேறி உணவு மற்றும் தண்னீர் பருகுவதாகவும் மூன்று நாட்களாக தாய் யானையுடன் இருந்த ஆண் குட்டி யானை மற்றொரு குட்டியுடன் இன்று அதிகாலை காட்டிற்குள் சென்று கூட்டத்துடன் இணைந்து உள்ளதாக வனத்துறையினர் தெரிவித்துள்ளனர்.மேலும் நான்கு தனிக்குழு அமைத்து டிரோன் மூலம் யானையின் நடவடிக்கைகள் குறித்து கண்காணித்து வருவதாக தெரிவித்தனர்.

Tags

Next Story