புலி தாக்கி இறந்த மாடு- இழப்பீடு வழங்கிய வனத்துறை
வனத்துறை சார்பில் இழப்பீடு
நீலகிரி மாவட்டம் கூடலூர் வனக்கோட்டம், பந்தலூர் வனச்சரகத்திற்க்கு உட்பட்ட கூமூலா பகுதியில் தேவராஜ் என்பவருக்கு சொந்தமான பசு மாடு மேய்ச்சலுக்கு சென்றுள்ளது. மாடு வீட்டிற்க்கு வராததை அறிந்து தேவராஜ் அருகில் உள்ள பகுதிகளில் தேடியுள்ளர். இந்நிலையில் நேற்று (09.01.2024) ம் தேதி அத்திக்குன்னா STR division பேரி அக்ரோ தேயிலை தோட்ட பகுதியில் புலியால் மாடு தாக்கி இறந்து கிடந்ததுள்ளது. இதனை மாட்டின் உரிமையாளருக்கு தேயிலை தோட்ட தொழிலாளர்கள் மூலம் தெரிவிக்கப்பட்டது.
மாட்டின் உரிமையாளர் வனப் பணியாளர்களுக்கு தகவல் தெரிவித்த பின் உடனே வனப்பணியாளர் சம்பவ இடத்திற்கு சென்று தணிக்கை செய்து ஊண் உண்ணியால் (புலி) தாக்கப்பட்டு இருந்தது உறுதி செய்யப்பட்டது. இதனை அடுத்து இன்று (10.01.2024) காலை உதவி கால்நடை மருத்துவர் சேரம்பாடி அவர்களால் பிரத பரிசோதனை செய்யப்பட்டு சம்பவ இடத்திலேயே புதைக்கப்பட்டது. மேலும் மாட்டின் உரிமையாளருக்கு இழப்பீடு தொகையாக ரூபாய் 30,000 க்கான காசோலை வனத்துறை மூலலே. வழங்கப்பட்டது