சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை: கிராமவாசிகள் அவதி

சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை: கிராமவாசிகள் அவதி
X
சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை கிராமவாசிகள் அவதி
சாலை அமைக்க வனத்துறை முட்டுக்கட்டை போடுவதால் கிராமவாசிகள் அவதிக்குள்ளாகி வருகின்றனர்.

செங்கல்பட்டு மாவட்டம், காட்டாங்கொளத்தூர் ஒன்றியம், சிங்கபெருமாள் கோவில் அடுத்த ஆப்பூர் கிராமத்தில், ஆப்பூர் -வளையகரணை இடையே 3. கி. மீ. , துார சாலை உள்ளது.

இந்த சாலை வழியாக, வளையகரணை கிராம மக்கள் சிங்கபெருமாள் கோவில், மறைமலை நகர், செங்கல்பட்டு உள்ளிட்ட பகுதிகளுக்கு, தினமும் சென்று வருகின்றனர். இந்த சாலை, பல ஆண்டுகளாக சேதமடைந்து, ஜல்லிக்கற்கள் பெயர்ந்து,

சாலை முழுதும் புதர் மண்டி காணப்படுகிறது. இதன் காரணமாக, இந்த சாலையில் செல்லும் வாகன ஓட்டிகள், அடிக்கடி விபத்தில் சிக்குகின்றனர். இருபுறமும் வனப்பகுதி என்பதால், முள்செடிகள் வளர்ந்து சாலையை ஆக்கிரமித்துள்ளன.

இதன் காரணமாக, வாகன ஓட்டிகள் இந்த சாலையில் செல்வதை தவிர்த்து, 2 கி. மீ. , துாரம் சுற்றிச் செல்கின்றனர்.

Tags

Next Story