பறவைகள் வாழ்விடம் குறித்து வனத்துறையினர் ஆய்வு

கெங்கவல்லி அதன் சுற்றுப்புற பகுதிகளில் நீர் நிலைகளில் பறவைகள் குறித்து வனத்துறையினர் ஆய்வு செய்தனர்.
சேலம் மாவட்டம் கெங்கவல்லி வட்டம் , மணிவிழுந்தான், தலைவாசல், வீரகனூர், தெடாவூர், நல்லூர் கெங்கவல்லி உள்ளிட்ட பகுதிகளில் உள்ள ஏரிகளில் தண்ணீர் உள்ளது. இந்த ஏரிகளுக்கு உள்ளூர், வெளிநாட்டை சேர்ந்த நீர் வாழ் மற்றும் நிலவாழ் பறவைகள் கூட்டம், கூட்டமாக வந்துள்ளன. வரும் 27, 28ல், நில, நீர் பறவைகள், உயிரினங்கள் குறித்து வனத்துறை சார்பில் கணக்கெடுப்பு மேற்கொள்ளப்பட உள்ளது. பறவைகள் அதிகளவில் உள்ள ஏரி, ஆறு, வனப்பகுதிகளில் வாழ்விடம் குறித்து, ஆத்தூர் கோட்ட வனத்துறை அலுவலர்கள் குழு ஆய்வு மேற்கொண்டு வருகிறது. இது குறித்து, வனத்துறையினர் கூறுகையில், 'பறவைகள், உயிரினங்கள் கணக்கெடுப்புக்கு முன்னதாக, அதன் வாழ்விடம், வழிப்பாதை குறித்து ஆய்வு செய்யப்படுகிறது. தவிர, வேட்டைகும்பலும் கண் காணிக்கப்பட்டு வருகிறது.' என்றனர்.

Tags

Next Story