குன்னூரில் காட்டுத்தீ - நால்வர் கைது !

நீலகிரி மாவட்டம் குன்னூர் அருகே காட்டுத்தீ பரவ காரணமாக இருந்த தேயிலை தோட்ட உரிமையாளர் உட்பட நால்வரை வனத்துறையினர் கைது செய்தனர்.
நீலகிரி மாவட்டம் குன்னூர் வண்டிச்சோலை பாரஸ்ட் டேல் வனப்பகுதியையொட்டி எபினேசர் ஜெயசீலபாண்டியன் என்பவரது தேயிலை தோட்டம் உள்ளது. இந்த தோட்டத்தில் கடந்த 12ம் தேதி கவாத்து பணி நடந்துள்ளது. கவாத்து செய்த தேயிலை செடிக் கழிவுகளை தீயிட்டு எரித்துள்ளனர். தீ அருகிலுள்ள வனப்பகுயிலும் பரவியது. இதனால் வனப்பகுதியில் இருந்த சாம்பிராணி மரங்கள், கற்பூர மரங்கள் அதிகம் எரிந்து ஏக்கர் கணக்கில் நாசமாகின. குன்னூர் வனச்சரகர் ரவீந்திரநாத தலைமையில் வனத்துறையினர் மற்றும் தீயணைப்புத் துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வர போராடினர். கடந்த இரண்டு நாட்களாக போராடியும் காட்டுத் தீயை கட்டுக்குள் கொண்டுவர முடியவில்லை. இது தொடர்பாக வனத்துறையினர் விசாரணை மேற்கொண்டதில் காட்டுத் தீ பரவ காரணமான தோட்ட உரிமையாளர் எபினேசர் ஜெயசீல பாண்டியன் மற்றும் சறுகளை தீப்பற்ற வைத்த ஊழியர்கள் கருப்பையா 63, மோகன் 35 ,ஜெயக்குமார் 60, ஆகிய நால்வரை கைது செய்து குன்னூர் குற்றவியல் நீதிமன்றத்தில் ஆஜர் படுத்தி குன்னூர் கிளை சிறையில் அடைத்தனர்.

Tags

Next Story