கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டு தீ
கொடைக்கானல் மலைப்பகுதியில் காட்டுத்தீ
திண்டுக்கல் மாவட்டம், கொடைக்கானல் மலைப்பகுதியில் கடந்த சில தினங்களாக கடும் வெப்பமானது தொடர்ந்து நிலவி வருகிறது, இதனால் செடி,கொடிகள்,புல்வெளிகள்,புற்கள் உள்ளிட்டவை காய்ந்து காட்சியளிக்கிறது, மேலும் மலைப்பகுதியில் சில நாட்களாகவே வனப்பகுதி, வருவாய் நிலம்,தனியார் தோட்டப்பகுதிகளில் தீயானது தொடர்ந்து எரிந்து வருவதும், அணைவதும் வாடிக்கையாக உள்ளது,
இந்நிலையில் கொடைக்கானல் வனச்சரகத்திற்கு உட்பட்ட தோகைவரை வனப்பகுதியில் காட்டு தீயானது மாலை வேளை முதல் எரிந்து வருகிறது, காற்றின் வேகத்தில் தீ மளமளவென பரவி இப்பகுதியில் தொடர்ந்து எரிந்து வருவதால் வனப்பகுதியை விட்டு வனவிலங்குகள் வெளியேறும் சூழ்நிலை ஏற்பட்டுள்ளது, மேலும் இந்த தீயினை அணைக்கும் முயற்சியில் வனத்துறையினர் சுமார் 10க்கும் மேற்பட்டோர் ஈடுபட்டு வருகின்றனர், மேலும் தீ தொடர்வதால் தோகைவரை மலைப்பகுதி முழுவதும் புகை மண்டலமாக காட்சியளிப்பதும் குறிப்பிடத்தக்கது.