ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் அருகே காட்டுத்தீ
பற்றி எரியும் தீ
ஏற்காட்டில் அரசு மருத்துவமனையில் அருகே காட்டுத்தீயை 3மணி நேரம் தீயணைப்பு வீரர்கள் போராடி அணைத்தனர்.
சேலம் மாவட்டத்தில் கோடைகாலம் தொடங்கும் முன்பே வெயிலின் தாக்கம் அதிகரித்து வருகிறது. ஏற்காடு மலை பகுதியில் மரங்களும், செடிகளும் பசுமையை இழந்து காய்ந்து காணப்படுகிறது.
இதனால் அங்கு காட்டுத்தீ ஏற்படாமல் தடுக்க வனத்துறையினர் முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். இதனிடையே ஏற்காடு அரசு ஆஸ்பத்திரி அருகே திடீரென காட்டுத்தீ ஏற்பட்டது.
மேலும் அங்கிருந்து அதிகளவு கரும்புகை வெளியேறியது இதனால் ஆஸ்பத்திரியில் இருந்து நோயாளிகள் வெளியே வந்தனர். இதுகுறித்து தகவல் கிடைத்ததும் ஏற்காடு தீயணைப்பு வீரர்கள் அங்கு விரைந்து சென்றனர். பின்னர் சுமார் 3 மணி நேரம் போராடி அந்த தீயை அணைத்தனர்.
Next Story