காட்டுத் தீ பரவி 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

காட்டுத் தீ பரவி 15 ஏக்கர் வனப்பகுதி எரிந்து நாசம்!

காட்டுத் தீ 

மாக்க மூலா பகுதியில்‌ திடீரென பரவிய காட்டுத் தீயால்‌ சுமார்‌ 15 ஏக்கர்‌ பரப்பளவிலான புல்வெளிகள்‌, மூங்கில்கள்‌ எரிந்து நாசமானது.
நீலகிரி மாவட்டம் கூடலூர்‌, முதுமலை, மசினகுடி பகுதிகளில் கடும்‌வறட்சி நிலவுகிறது. இதனால்‌ வனப்பகுதியில்‌ உள்ள மரங்களில்‌ இலைகள்‌ உதிர்ந்து காணப்படுகிறது. மேலும்‌ புல்வெளிகள்‌ காய்ந்‌துள்ளன. இவ்வாறு பசுமை இழந்து காணப்படுவதால்‌ காட்டுத்தீ எளிதாக பரவும் நிலை உள்ளது. இதனால்‌ வனத்துறையினர்‌ கண்காணிப்பு பணியை தீவிரப்படுத்தியுள்ளனர். இந்நிலையில்‌ கூடலூர்‌ அல்லூர்‌ வயல்‌, மாக்க மூலா பகுதிகளில் நேற்று முன்தினம் மதியம் சுமார் 3 மணியளவில் திடீரென காட்டுத்தி பத்துபரவியது. தகவல் அறிந்த வனத்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்தனர். அவர்களால் தீயை கட்டுப்படுத்த முடியாததால், தீயணைப்பு துறையினர்யினருடன் இணைந்து தீயை கட்டுக்குள் கொண்டு வந்தனர். இதில் சுமார் 15 ஏக்கர் வனப்பகுதி தீயில் கருகிய நாசமானது. இந்த சம்பவம் குறித்து அப்பகுதி மக்கள் கூறுகையில், " சிங்காரா பவர் ஹவுஸ் சுவிட்சார்டு வனப்பகுதியில் உயர் மின்னழுத்த மின்கம்பி அறுந்து விழுந்ததன் காரணமாக இந்த தீ விபத்து ஏற்பட்டுள்ளது. ஒவ்வொரு ஆண்டும் இந்த பாதிப்பு ஏற்படுகிறது. உயர் மின் அழுத்த மின் கம்பிகளின் கீழே உள்ள மரக்கிளைகள், புதர்கள் செடிகளை வெட்டி பராமரிக்காததே 15 ஏக்கர் அளவில் தீயில் கருகியதற்கு காரணம்,"என்கின்றனர். வனத்துறையினர், மின்வாரியத்தினருடன் இணைந்து இப்பிரச்னைக்கு நிரந்தர தீர்வு காண நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே பொதுமக்களின் கோரிக்கையாக உள்ளது.

Tags

Next Story