கள்ளக்காதல் விவகாரம்: வாலிபர் வெட்டி படுகொலை
கொலை நடந்த இடம்
விருதுநகர் மாவட்டம் இராஜபாளையத்தில் மது விற்பனையில் முன் விரோத காரணமாக வாலிபர் வெட்டி கொலை வழக்கில் திடீர் திருப்பமாக கள்ளக்காதலால் கொலை நடந்ததாக இரண்டு குற்றவாளிகள் கைது செய்து விசாரணை விருதுநகர் மாவட்டம் இராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவை சேர்ந்தவர் மைனர் இவரது மனைவி மாலதி இவர்களுக்கு திருமணமாகி அஸ்வினி பிரியா.அஸ்வித் என்ற இரண்டு குழந்தைகள் உள்ளனர் இவர் இராஜபாளையம் துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெருவில் வசித்து வருகின்றனர் .
மைனர் தமிழ்நாடு காவல்துறையில் காவலராக கொளத்தூர் மாவட்டம் இராஜமங்கலம் காவல் நிலையத்தில் பணியாற்றி வருகிறார் இவரது மனைவி மாலதி இராஜபாளையத்தில் துரைசாமிபுரத்தில் வசித்து வருகிறார் . இந்த நிலையில் துரைசாமிபுரம் பகுதியைச் சேர்ந்த ராமசாமி மகன் சரவணன் வயது 36 திருமணம் ஆகாத நிலையில் மைனர் மனைவி மாலதியுடன் கள்ளத்தொடர் ஏற்பட்டுள்ளது.
இந்த கள்ளத்தொடர்பு கடந்த ஒரு ஆண்டுகளாக கள்ளத்தொடரில் இருந்து வந்த நிலையில் சென்னையில் பணியாற்றக்கூடிய காவலர் மைனருக்கு தெரிய வந்த நிலையில் மைனரும் அவரது தம்பி பாண்டியராஜனும் சரவணனை அழைத்து கண்டித்துள்ளனர் இருந்த போதும் மாலதியும் சரவணனும் கள்ளத் தொடர்பில் இருந்துள்ளனர் இது சம்பந்தமாக கடந்த 10 தினங்களுக்கு முன்பு இவர்கள் இடையே வாக்குவாதம் ஏற்பட்டுள்ளது.
இதை அப்பகுதியை சேர்ந்த பெரியவர்கள் கண்டித்து அனுப்பி உள்ளனர் இந்த நிலையில் நேற்று இரவு துரைச்சாமிபுரம் செங்குட்டுவன் தெரு நகராட்சி பொது கழிப்பிடம் அருகே சரவணன் மற்றும் அவரது நண்பர்கள் மது அருந்தி கொண்டிருந்த பொழுது அங்கே வந்த மைனர் மற்றும் அவரது தம்பி பாண்டியராஜன் பாண்டியராஜனின் நண்பர் அழகுராஜ் என்ற சூப் ஆகிய மூன்று பேரும் சேர்ந்து சரவணனை சரமாரியாக அறிவாளன் வெட்டி சாய்த்து விட்டு தப்பி ஓடி உள்ளனர் .
சத்தம் கேட்டு வந்த அக்கம்பக்கத்தினர் காவல்துறைக்கு தகவல் தெரிவித்ததை அடுத்தது இராஜபாளையம் தெற்கு காவல் நிலைய போலீசார் உடலை கைப்பற்றி இராஜபாளையம் அரசு மருத்துவமனைக்கு கொண்டு சென்று பரிசோதனை செய்த பொழுது அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக மருத்துவர்கள் தெரியவந்துள்ளனர்.
இதை அடுத்து இந்த கொலை வழக்கில் சம்பந்தப்பட்ட மூன்று குற்றவாளிகளையும் போலீசார் தேடி வந்த நிலையில் இரண்டாவது குற்றவாளியான பாண்டியராஜன் மூன்றாவது குற்றவாளியான அழகர்சாமி என்ற சூப் ஆகிய இருவரையும் கைது செய்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர் தலைமுறைவாக இருந்துவரும் முதல் குற்றவாளியான மைனரை போலீசார் தனிப்படை அமைத்து தேடி வந்த நிலையில் ராஜபாளையம் ரயில் நிலையத்தில் மறைந்திருந்த பொழுது போலீசார் கைது செய்துள்ளனர்.
இந்த கொலைச் சம்பவம் கள்ளத்தொடர்பால் ஏற்பட்டிருந்தாலும் அந்தப் பகுதியில் மது மற்றும் கஞ்சா பழக்கம் அதிகமாக இருப்பதாகவும் அதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் தங்கள் கோரிக்கையை முன் வைத்துள்ளனர்