முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர் ஆலோசனை கூட்டம்

முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர் ஆலோசனை கூட்டம்

முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர் ஆலோசனை கூட்டம்

வேலூரில் முன்னாள் மத்திய ஆயுத காவல் படை வீரர்கள் ஆலோசனை கூட்டம் நடைபெற்றது.

வேலூர், திருவண்ணாமலை, ராணிப்பேட்டை மற்றும் திருப்பத்தூர் ஆகிய மாவட்டங்களை சேர்ந்த முன்னாள் மத்திய ஆயுத காவல்படை வீரர்களுக்கான ஆலோசனைக்கூட்டம் மற்றும் கௌரவிப்பு விழா வேலூர் கோட்டை சுற்றுச்சாலையில் உள்ள காவலர் நல்வாழ்வு மன்றத்தில் நடந்தது. கூட்டத்திற்கு சங்க மாநில தலைவர் (டிஎன்சிஎப் வாரா) விஜயகுமார் தலைமை தாங்கினார். இதில் வேலூர் ஏடிஎஸ்பி கோட்டீஸ்வரன் கலந்து கொண்டு பேசினார்.சத்தீஸ்கர் பகுதியில் வீரமரணமடைந்த பென்னாத்தூரை சேர்ந்த தேவன் என்பவரது குடும்பத்தினரை வரவழைத்து கௌரவித்தனர்.

ஜீவன் ரக்‌ஷா விருதுபெற்ற எல்லை பாதுகாப்பு படை வீரர் உமாசங்கர் என்பவரை பாராட்டினர்.இந்த கூட்டத்தில் தமிழக துணை ராணுவப்படை வீரர்களின் குழந்தைகளின் மேற்படிப்புக்கு இடஒதுக்கீடு தரவேண்டும், தமிழகத்தில் உள்ள மாநகராட்சி, பேரூராட்சி மற்றும் கிராமங்களில் வீட்டுவரி, குழாய் வரி மற்றும் இதர வரிகளில் இருந்து விலக்கு அளிக்க வேண்டும். டிஎன்பிஎஸ்சி சார்பில் நடத்தப்படும் போட்டிதேர்வுகளில் மத்திய காவல்படை வீரர்களுக்கென 5 சதவீத இடஒதுக்கீடு அளிக்க வேண்டும், தமிழகத்தை சேர்ந்த மத்திய காவல்படை வீரர்களுக்கென நலவாரியம் மற்றும் தனி அமைச்சகம் ஏற்பாடு செய்யவேண்டும், மாதந்தோறும் குறைத்தீர்வு கூட்டம் நடத்தவேண்டும் உள்ளிட்ட தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டு அரசுக்கு கோரிக்கை வைத்தனர்.

Tags

Next Story