முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழா

சிவகாசியில் மறைந்த முன்னாள் முதல்வர் ஜெ.ஜெயலலிதாவின் 76வது பிறந்த நாள் விழாவை முன்னாள் அமைச்சர் ராஜேந்திர பாலாஜி தலைமையில் அதிமுகவினர் கேக் வெட்டி கொண்டாடினர்.
விருதுநகர் மாவட்டம், சிவகாசியில்,மறைந்த முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் 76 பிறந்த நாள் விழாவை முன்னாள் அமைச்சர் கே.டி.இராஜேந்திரபாலாஜி தலைமையில் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகளுடன் கேக் வெட்டி சிறப்பாக கொண்டாடப்பட்டன. நிகழ்ச்சியில்,சிவகாசி ஒன்றிய முன்னாள் தலைவர் சுப்பிரமணியன் மற்றும் இளைஞர் மற்றும் இளம் பெண்கள் பாசறை நிர்வாகிகள் உட்பட கட்சி நிர்வாகிகள் ஏராளமானோர் கலந்து கொண்டனர்.

Tags

Next Story