முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதாவின் பிறந்தநாள் விழா

ஜெயலலிதா பிறந்த நாள் விழா

முன்னாள் முதல்வர் ஜெயலலிதா பிறந்த நாள் விழாவை முன்னிட்டு சேலம் மாநகர மாவட்ட செயலாளர் வெங்கடாசலம் தலைமையில் அதிமுகவினர் மாலை அணிவித்து மரியாதை செலுத்தினர்.
தமிழக முன்னாள் முதல்- அமைச்சர் ஜெயலலிதாவின் 76 -வது பிறந்த நாளையொட்டி சேலம் மாநகர் மாவட்ட அ.தி.மு.க. சா ர்பில் அண்ணா பூங்காவில் உள்ள மணிமண்டபத்தில் எம்.ஜி.ஆர் -ஜெயலலிதா உருவ சிலைக்கு மாநகர் மாவட்ட செயலாளர் ஜி. வெங்கடாஜலம் தலைமையில் மாலை அணிவித்து மரியாதை செலுத்தப்பட்டது. அதனைத் தொடர்ந்து அங்கு கட்சி கொடியேற்றி வைத்து ஜி. வெங்கடாஜலம் பொது மக்களுக்கு இனிப்புகள் வழங்கி அன்னதானத்தை தொடங்கி வைத்தார். இந்த நிகழ்ச்சியில் பாலசுப்பிரமணியன் எம்.எல்.ஏ, அவைத்தலைவர் பன்னீர்செல்வம் பொருளாளர் பங்க் வெங்கடாசலம், முன்னாள் எம்.எல்.ஏ.க்கள் எம்.கே. செல்வராஜ், ரவிச்சந்திரன், சக்திவேல், முன்னாள் மேயர் சவுண்டப்பன், பகுதி செயலாளர்கள் மாரியப்பன், பாலு, சரவணன் , முருகன், யாதவமூர்த்தி, ஜெயபிரகாஷ், சண்முகம், பாண்டியன், உள்பட நிர்வாகிகள் பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story