மாட்டுத்தாவணியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

மாட்டுத்தாவணியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம்

 மாட்டுத்தாவணியில் காய்கறி மார்க்கெட்டில் தேர்தல் பிரச்சாரம் செய்த முன்னாள் முதல்வர் பழனிசாமி.  

மதுரை, மாட்டுத்தாவணியில் முன்னாள் முதல்வர் பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டார்.

மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிசாமி தேர்தல் பிரச்சாரம் செய்தார் மதுரை மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் அதிமுக மதுரை பாராளுமன்ற வேட்பாளர் மருத்துவர் சரவணன்-ஐ ஆதரித்து அதிமுகவின் பொது செயலாளர் எடப்பாடி பழனிசாமி வாக்குகள் சேகரித்தார்.

குறிப்பாக மாட்டுத்தாவணி சென்ட்ரல் காய்கறி மார்க்கெட்டில் உள்ள காய்கறி வியாபாரிகள் மற்றும் வணிகர்களிடம் துண்டு பிரசுரங்கள் கொடுத்து கலந்துரையாடி மதுரை பாராளுமன்ற அதிமுக வேட்பாளர் மருத்துவர் சரவணனுக்கு வாக்குகள் சேகரித்தார்.இந்நிகழ்வில் முன்னாள் அமைச்சர்கள் செல்லூர் ராஜு, ஆர்.பி.உதயகுமார், எம்எல்ஏ ராஜன் செல்லப்பா மற்றும் சென்ட்ரல் காய்கறி மார்க்கெட் வணிகர்கள், விற்பனையாளர்கள், உரிமையாளர்கள் உட்பட பலரும் கலந்து கொண்டனர்.

Tags

Next Story