முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்

முன்னாள் காங்கிரஸ் எம்எல்ஏ மரணம்

சிறுவங்கூரில் இறந்த சின்னசேலம் முன்னாள் எம்.எல்.ஏ., சிவராமன் உடலுக்கு கட்சியினர் மற்றும் ஊர் மக்கள் பலரும் அஞ்சலி செலுத்தி சென்றனர்.
கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரை சேர்ந்தவர் சிவராமன்,81. காங்., சார்பில் கடந்த 1980-ம் ஆண்டு தேர்தலில் சின்னசேலம் சட்டசபை தொகுதி எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். அதனைத் தொடர்ந்து 1984-ல் நடந்த தேர்தலில் காங்., கட்சி சார்பில் மீண்டும் எம்.எல்.ஏ.,வாக தேர்ந்தெடுக்கப்பட்டார். இருமுறை சின்னசேலம் தொகுதி எம்.எல்.ஏ.,வாக இருந்த இவருக்கு, இரு மகன்கள், இரு மகள்கள் உள்ளனர். கள்ளக்குறிச்சி அடுத்த சிறுவங்கூரில் வசித்து வந்த இவர், தனது 81-வது வயதில் நேற்று இயற்கை மரணமடைந்தார். கட்சி பிரமுகர்கள், உறவினர்கள், ஊர் பொது மக்கள் பலரும் இவரது உடலுக்கு அஞ்சலி செலுத்தினர்.

Tags

Read MoreRead Less
Next Story