வெற்றி பெற்ற வேட்பாளருக்கு வாழ்த்து தெரிவித்த முன்னாள் எம்பி

தர்மபுரி நாடாளுமன்ற தொகுதியில் வெற்றி பெற்ற திமுக வேட்பாளர் ஆ.மணியை முன்னாள் எம்பி செந்தில் குமார் நேரில் சந்தித்து சால்வை அணிவித்து பாராட்டு தெரிவித்தார்.
தர்மபுரி நாடாளுமன்ற தேர்தலில் திமுக வேட்பாளர் ஆ.மணி 4,32, 667 வாக்குகள் பெற்று வெற்றி பெற்றார். அதில் தொடர்ந்து முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் டாக்டர்.செந்தில்குமார் வெற்றி பெற்ற ஆ.மணிக்கு சால்வை அணிவித்து வாழ்த்துக்களை தெரிவித்தார். இந்த நிகழ்ச்சியில் உடன் மாவட்ட கழக செயலாளர்கள் தடங்கம் சுப்பிரமணி, பழனியப்பன், நகரக் கழக செயலாளர் நாட்டான் மாது,மாணவரணி அமைப்பாளர்கள் வெங்கடேஸ்வரன், அசோக், குமார், முத்தமிழ், இளைஞர் அணி அமைப்பாளர்கள் எம்பி பெரியண்ணன், சுற்றுச்சூழல் அணி அமைப்பாளர் இளைய சங்கர் தகவல் தொழில்நுட்ப பிரிவு அமைப்பாளர் கௌதம் கட்சி தொண்டர்கள் சால்வை வைத்து வாழ்த்துகளை தெரிவித்தனர்.

Tags

Next Story