அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு ஆதரவாக முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
முன்னாள் அமைச்சர் பிரச்சாரம்
பாராளுமன்ற தேர்தல் நெருங்கி வரும் நிலையில் திமுக அதிமுக பாஜக மற்றும் கூட்டணி கட்சி வேட்பாளர்கள் தமிழகம் முழுவதும் தீவிர பிரச்சாரத்தில் வாக்கு சேகரித்து வரும் நிலையில் இன்று திருச்சி பாராளுமன்ற தொகுதி அதிமுக வேட்பாளர் கருப்பையாவிற்கு புதுக்கோட்டை நகரப் பகுதி முழுவதும் தமிழக முன்னாள் அதிமுக சுகாதாரத் துறை அமைச்சர் சி.விஜயபாஸ்கர் வாக்குகளை சேகரித்து பிரச்சாரத்தில் ஈடுபட்டார்.
அப்போது முன்னாள் அதிமுக அமைச்சர் விஜயபாஸ்கர் பேசுகையில் புதுக்கோட்டை மாவட்டத்தில் பறிபோன பாராளுமன்ற ( MP) தொகுதி மீண்டும் மீட்டெடுக்க இரட்டை இலை சின்னத்திற்கு வாக்களித்து கருப்பையாவை வெற்றிபெற வைக்க வேண்டும் என்றும் திருச்சி பாராளுமன்ற தொகுதியில் போட்டியிடும் அதிமுக வேட்பாளர் கருப்பையா புதுக்கோட்டையைச் சேர்ந்தவர் இவரை,
பொதுமக்கள் சந்தித்து குறைகளை சொல்ல வேண்டுமானால் புதுக்கோட்டையில் சந்தித்து சொல்லலாம் ஆனால் இவரை எதிர்த்து போட்டியிடுகின்ற திமுக கூட்டணி கட்சியின் வேட்பாளர் துரை வைகோ அவர்களை சந்திக்க வேண்டுமானால் ஐந்து பஸ் மாறிச் சென்று சிவகாசியில் தான் சந்திக்க முடியும்.
எனவே இதனை புதுக்கோட்டையில் உள்ள பொதுமக்கள் உணர்ந்து வாக்களிக்க வேண்டும் என விஜயபாஸ்கர் பேசினார்