கெலவள்ளியில் விபத்தில் சிக்கியவர்களுக்கு ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்
ஆறுதல் கூறிய முன்னாள் அமைச்சர்
கெலவள்ளியில் விபத்துக்கு உள்ளான நபர்களுக்கு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது அவர்களை நேரில் சந்தித்து முன்னாள் அமைச்சர் ஆறுதல் தெரிவித்தார்.
தருமபுரி மாவட்டம் , அரூர் சட்டமன்ற தொகுதிக்குட்பட்ட மொரப்பூர் ஒன்றியம் கெலவள்ளி ஊராட்சிக்குட்பட்ட பதினைந்து நபர்கள் பயணம் செய்த வாகனம் எதிர்பாராத விதமாக நேற்று விபத்து ஏற்பட்டு காயம் அடைந்தனர்.
இதனை அடுத்து அவர்களை உடனடியாக தருமபுரி அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சிகிச்சைக்காக அனுமதிக்க்கப்பட்டனர்.
இது குறித்து தகவல் அறிந்த திமுக மேற்கு மாவட்ட செயலாளர் மற்றும் முன்னாள் அமைச்சர் பழனியப்பன், நிர்வாகிகளுடன் அரசு மருத்துவமனைக்கு விபத்தில் காயம் அடைந்தவர்களை நேரில் சந்தித்து ஆறுதல் கூறி மருத்துவர்களிடம் உரிய சிகிச்சை வழங்க கேட்டுக்கொண்டார்.
Next Story