காலை வெட்டிக்கொண்ட அதிமுக பிரமுகருக்கு முன்னாள் அமைச்சர் ஆறுதல்
தூத்துக்குடியில் தேர்தல் பந்தயத்தில் தோற்றத்தால் காலை வெட்டி கொண்ட அதிமுக பிரமுகரை முன்னாள் அமைச்சர் செல்லப்பாண்டியன் சந்தித்து ஆறுதல் கூறினார்.
பாராளுமன்ற தேர்தலில் தூத்துக்குடி தொகுதியில் அதிமுக தோல்வியடைந்ததால், தூத்துக்குடி திரவியபுரம் பகுதியை சேர்ந்த அதிமுக மூத்த தொண்டர் செல்வக்குமார் (75). என்பவர் தனது காலை வெட்டி ரத்தத்தை சாலையில் விட்டு பந்தயத்தை நிறைவேற்றியுள்ளார்.
இதனைக் கேள்விப் பட்ட அதிமுக வர்த்தக அணி செயலாளர், முன்னாள் அமைச்சர் சி.த செல்லப்பாண்டியன் அவரை சந்தித்து ஆறுதல் கூறி, அவரின் சிகிச்சை செலவுகளை ஏற்றுக்கொண்டு நிதி உதவியினை அளித்தார்.
மேலும் இது போன்ற உயிருக்கு ஆபத்தான செயல்களில் ஈடுபடக்கூடாது எனவும் அறிவுரை வழங்கினார்.
Next Story